Onetamil News Logo

காமராஜ் கல்லூரியில்  தென் மாநிலஅளவில் மாற்றுத் திறனாளிகள் அமர்வு கிரிக்கெட் போட்டி

Onetamil News
 

காமராஜ் கல்லூரியில்  தென் மாநிலஅளவில் மாற்றுத் திறனாளிகள் அமர்வு கிரிக்கெட் போட்டி



தூத்துக்குடி 2018 ஏப்ரல் 15 ;  ஜெயன்ட் குரூப் ஆப் தூத்துக்குடி சகேலி மற்றும் தூத்துக்குடி காமராஜ் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அணி 54 மற்றும் 56ன் சார்பாக தென்மாநில அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கிடையேயான ஒருநாள் அமர்வு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.  இந்தப் போட்டியில் தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட அணிகள் கலந்து கொண்டன.  போட்டிகள் லீக் முறையில் நடைபெற்றன.  துவக்க விழா நிகழ்ச்சியில் ஜெயன்ட் குரூப் ஆப் தூத்துக்குடி சகேலியினைச் சார்ந்த சொர்ணலதா வரவேற்புரையாற்றினார். போட்டியினை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெ.மகேந்திரன் துவக்கி வைத்தார்.  ஆவருடைய உரையில் மாற்றுத் திறனாளிகள் கடவுளின் குழந்தைகள் என்றும், ஒற்றுமை உணர்வு அவர்களுக்கு அதிகம் என்றும் அவரது உரையில் கூறினார்.  அதற்கு உதாரணமாக பாரா ஒலிம்பிக் நிகழ்ச்சி ஒன்றினில் நடைபெற்ற போட்டி ஒன்றினை நினைவு கூர்ந்தார்.  முதுரை ஓய்வு பெற்ற நீதிபதி சங்கரநாராயணன், முன்னிலை வகித்தார்.  காமராஜ் கல்லூரி முதல்வர் முனைவர் து.நாகராஜன் வாழ்த்துரை வழங்கினார்.  ஜெயன்ட் குரூப் ஆப் தூத்துக்குடி சகேலியின் செயலர் மலர்விழி நன்றியுரையாற்றினார்.  முதல் போட்டியாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி அணிகள் மோதின, அதில் தூத்துக்குடி அணி வெற்றி பெற்றது.  இரண்டாவதாக நடைபெற்ற திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி அணிகளுக்கிடையேயான போட்டிகளில் கன்னியாகுமரி அணி வெற்றி பெற்றது.  மூன்றாவதாக நடைபெற்ற தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி அணிகளுக்கிடையேயான போட்டிகளில் கன்னியாகுமரி அணி வெற்றி பெற்றது.  அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இறுதிப் போட்டியில் தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி அணிகள் மோதின.  டாஸ் வென்ற கன்னியாகுமரி அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது.  இதில் கன்னியாகுமரி அணி வெற்றிக்கோப்பையை தட்டிச்சென்றது.  அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்ப விழாவில் சினிமா நடிகரும், சமூகஆர்வலருமான அபிசரவணன் கலந்து கொண்டு வெற்றிக்கோப்பைகளையும், ரூபாய் 5000 ரொக்கப்பரிசும், இரண்டாம் இடம் பெற்ற தூத்துக்குடி அணிக்கு கோப்பையும் ரூபாய் 3000 ரொக்கப்பரிசினையும், மூன்றாம் இடம் பெற்ற திருநெல்வேலி அணிக்கு கோப்பையும்,ரூபாய் 2000 ரொக்கப்பரிசினையும் வழங்கினார்.  பரிசளிப்புவிழா நிகழ்ச்சிக்கு எம்.லட்சுமணன் முன்னிலை வகித்தார்.  காமராஜ் கல்லூரி நாட்டுநலப் பணித்திட்ட மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.  இந்தப் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை ஜெயன்ட் குரூப் ஆப் தூத்துக்குடி சகேலி அமைப்பின் நிர்வாகிகளான வழக்கறிஞர் சொர்ணலதா, மலர்விழி, அமுதா, சுபாஷினி, காமராஜ் கல்லூரிநாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் ஆ.தேவராஜ் மற்றும் பா.பொன்னுத்தாய் ஆகியோர் செய்திருந்தனர்.  இந்த நிகழ்ச்சியில் செந்தில் கண்ணன், மயில்வேல், கார்த்திக் பிரபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.  

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo