Onetamil News Logo

தூத்துக்குடியில் 3 ஆண்டுகளாக இருளில் மில்லர்புரம் ஆயுதப்படை பிரதான சாலை 

Onetamil News
 

தூத்துக்குடியில் 3 ஆண்டுகளாக இருளில் மில்லர்புரம் ஆயுதப்படை பிரதான சாலை 


தூத்துக்குடி ஜனவரி 10; தூத்துக்குடியில் 3 ஆண்டுகளாக இருளில்  மில்லர்புரம் ஆயுதப்படை பிரதான சாலை  ;மேற்கு மண்டல மாநகராட்சி  நடவடிக்கை எடுக்குமா?                                                                                                 
 தூத்துக்குடி  மாநகராட்சிக்கு உட்பட்ட மேற்கு மண்டல அலுவலகம் மில்லர்புரம் ஆயுதப்படை பிரதான சாலையில் செயல்பட்டு வருகிறது. இதற்க்கு அருகில் ஆயுதப்படை அலுவலகம், குடியிருப்பு வீடுகள், டி.எம்.பி காலனி, கல்யாணமண்டபங்கள், மருத்துவமனைகள், உட்பட இந்தப்  பகுதியானது மிகவும் முக்கிய சாலையாக கருதப்படுகிறது.இந்தப்பகுதியில் தினமும் 10 ஆயிரம் பேருக்கு மேல் கடந்து செல்லுகின்றனர்.ஆனால் அடிப்படை வசதியானது செய்து கொடுக்கப்படவில்லை என்பது இந்த பகுதி மக்களின் குறையாகும்,இந்த இருள் நிறைந்த சாலையில் வழிப்பறி,செயின் பறிப்பு,போன்றவையும் நடந்துள்ளது.அருகில் பொது மையவாடி இருப்பதினால் தப்பிக்க வழியும் இருக்கிறது.
இது குறித்து மாநகராட்சியிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அப் பகுதி மக்கள்  கூறினார்கள். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo