Onetamil News Logo

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 403 கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்களுக்கான ஒரு நாள் அறிமுக பயிற்சி கலெக்டர் சந்தீப் நந்தூரி,தகவல்

Onetamil News
 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 403 கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்களுக்கான ஒரு நாள் அறிமுக பயிற்சி கலெக்டர் சந்தீப் நந்தூரி,தகவல்


தூத்துக்குடி 2020 ஜனவரி 22 ; தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 403 கிராம ஊராட்சிகளுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சித் தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்களுக்கான ஒரு நாள் அறிமுக பயிற்சியினை  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ துவக்கி வைக்கிறார் - மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,  தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது அறிவிப்பு ;தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 403 கிராம ஊராட்சிகளுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சித் தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்களுக்கான ஒரு நாள் அறிமுகப் பயிற்சி தூத்துக்குடி ஹோட்டல் பானுபிருந்தாவன் கிரீன் பார்க்கில் 24.01.2020 மற்றும் 25.01.2020 ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது.  இப்பயிற்சியினை  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ 24.01.2020 அன்று காலை துவக்கி வைக்க உள்ளார்கள். 
தூத்துக்குடி, கருங்குளம், திருவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம் மற்றும் கோவில்பட்டி ஆகிய 8 ஊராட்சி ஒன்றியங்களில் 202 ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சித் தலைவர்கள் துணைத்தலைவர்களுக்கான அறிமுகப் பயிற்சி 24.01.2020 அன்றும் கயத்தார், ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் மற்றும் புதூர் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 201 ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சித் தலைவர்கள் துணைத்தலைவர்களுக்கான அறிமுகப் பயிற்சி 25.01.2020 அன்றும் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இப்பயிற்சி காலை 10.00 மணி முதல் பிற்பகல் 5.00 மணி வரை நடத்தப்பட உள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சித் தலைவர்கள் மூலம் ஊராட்சி நிர்வாகம் சிறப்பாக நடைபெறும் பொருட்டு அரசியலமைப்பு ஆணைகள் அவர்களுக்கான பொறுப்புகள் மற்றும் உள்ளாட்சிகளுக்கான நிர்வாக அதிகாரம், அரசால் செயல்படுத்தப்படும் முதன்மை திட்டங்கள், குடிமை செயல்பாடுகள் குறித்து அறியவும் அதனை நன்கு செயல்படுத்திடும் நோக்கத்துடன் நடைபெறும் இப்பயிற்சியில் அனைத்து கிராம ஊராட்சிகளின் கிராம ஊராட்சித் தலைவர்கள் மற்றம் துணைத் தலைவர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,தெரிவித்துள்ளார்.
 

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo