Onetamil News Logo

கொடிய பாம்பின் கடியிலிருந்து 10 மணிநேர தீவிர சிகிச்சைக்கு பின்னர் சிறுவன் குணமானது அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் ஒரு சாதனையாகும் - தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மரு.ரேவதி பாலன் தகவல்

Onetamil News
 

கொடிய பாம்பின் கடியிலிருந்து 10 மணிநேர தீவிர சிகிச்சைக்கு பின்னர் சிறுவன் குணமானது அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் ஒரு சாதனையாகும் - தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மரு.ரேவதி பாலன் தகவல்


தூத்துக்குடி 2020 மே.20: கொடிய பாம்பின் கடியிலிருந்து 10 மணிநேர தீவிர சிகிச்சைக்கு பின்னர் சிறுவன் குணமானது அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் ஒரு சாதனையாகும் - தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மரு.ரேவதி பாலன் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மரு.ரேவதி பாலன் .கூறியதாவது... ஓட்டப்பிடாரத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவரின் மகன் 13 வயது சிறுவன் குருகார்த்திக் நேற்றைய தினம் (18.5.2020) அன்று விளையாடிக்கொண்டிருந்த போது கடும் விஷ தன்மையுள்ள கட்டு விரியன் பாம்பினால் கடிக்கபட்டு மிகவும் ஆபத்தான நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டான். வரும்போது முற்றும் மயங்கிய நிலையில் உணர்வே இல்லாத நிலையில் இருந்தான். நாடித்துடிப்பும் இரத்த அழுத்தமும் பதிவு செய்ய முடியாத அளவுக்கு மோசமாக இருந்தான். 
இதை அறிந்த மருத்துவ கல்லூரி முதல்வர் மரு.ரேவதி பாலன் , உடனடியாக மருத்துவ துறை அவசர பிரிவுக்கு தொடர்பு கொண்டு அனைத்து வகையான சிகிச்;சையும் தாமதமின்றி சிறுவனுக்கு கிடைக்கும்படி உத்தரவிட்டார். அவர்களுடைய வழிகாட்டுதலின் படியும் அவசர சிகிச்சை பிரிவிலிருந்த மருத்துவர் மற்றும் பணியிலிருந்த செவிலியர் வேகமாக செயல்பட்டு சிறுவனை சுவாச கருவியில் பொருத்தி, சுவாசம் சீராக இயங்க கூடிய மருந்துகளை உடனே செலுத்தினர்.  
10 மணிநேர தீவிர சிகிச்சைக்கு பின்னர் சிறுவனின் உடல்நிலை தேற ஆரம்பித்தது. காலை சிறுவனுக்கு முழு உணர்வு திரும்பியது, நாடி துடிப்பு, இரத்த அழுத்தம் சீரானது, தற்போது (பகல் 2 மணிக்கு) எழுந்து அமர்ந்து வாய்வழியாக உணவு உண்ணும் நிலைக்கு முன்னேறியுள்ளான். சிறுவனின் தாயார் மருத்துவ கல்லூரி முதல்வரின் உடனடி கவனிப்பும் மருத்துவ குழுவின் உழைப்புமே தன் பையனின் உயிர்பிழைக்க காரணம் என கூறி மருத்துவ கல்லூரி முதல்வருக்கு நன்றி தெரிவித்தார்.  
இன்று காலை மருத்துவ கல்லூரி முதல்வர் மரு.ரேவதி பாலன் , நேரில் சென்று சிறுவனை பார்த்து நலம் விசாரித்தார். கொடிய பாம்பின் கடியிலிருந்து இவ்வளவு விரைவில் சிறுவன் குணமானது அரசு மருத்துவ மனையின் ஒரு சாதனையாகும் என மருத்துவ கல்லூரி முதல்வர் மரு.ரேவதி பாலன் தெரிவித்துள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo