Onetamil News Logo

தூத்துக்குடியில்  231 கடைகளின் முன்பிருந்த சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம் 

Onetamil News
 

தூத்துக்குடியில்  231 கடைகளின் முன்பிருந்த சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம் 


 தூத்துக்குடி 2019 நவம்பர் 6 ;தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் பெருகி வரும் மக்கள் தொகை மற்றும் வாகனங்களினால் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு பொது மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.  மேலும் சாலையோரப் பகுதிகளில் காணப்படும் பலரது ஆக்கிரமிப்பின் காரணமாக பொதுமக்கள் நடப்பதற்குக்கூட போதுமான இடவசதியின்றி சாலையின் மையப் பகுதியினை பயன்படுத்தும் சூழ்நிலை இருந்து வருகிறது. இதனால் தேவையற்ற விபத்துக்கள் ஏற்படுவதுடன் பொதுமக்கள் குறிப்பாக வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே இப்பிரச்சனையினை ஒழுங்குபடுத்தும் விதமாக மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புதாரகளுக்கு முறையாக அறிவிப்பு அனுப்பி ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு கால அவகாசம் வழங்கப்பட்டது.  இந்த நிலையில்  மாநகரின் பிரதான பகுதிகளில் காணப்பட்ட ஆக்கிரமிப்புகளை தாமாக அகற்ற முன் வராத ஆக்கிரமிப்புகள்  இன்று மாநகராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் அடங்கிய மூன்று குழுக்கள் மூலம் அகற்றப்பட்டது. 
மேற்படி நிகழ்வின் போது 231 கடைகளின் முன்பிருந்த ஆக்கிரமிப்புகள்  மற்றும்   மாநகராட்சிக்கு சொந்தமான 2 கிணறுகள் ஆகியவை ஆக்கிரமிப்புதாரார்களிடமிருந்து கையகப்படுத்தப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. 
மேற்படி பணியானது வாரந்தோறும் புதன்கிழமை நடைபெறுவதற்கு திட்டமிட்ட நிலையில், தொடர்ச்சியாக நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே ஆக்கிரமிப்புதாரர்கள் ஆக்கிரமிப்புகளை உடனடியாக தாமாக முன்வந்து அகற்ற தெரிவிக்கப்படுகிறது.  தவறும் நிலையில் மாநகராட்சியால் அப்புறப்படுத்துவதோடு அதற்கான செலவினத்தின் இருமடங்கு தொகையினை ஆக்கிரமிப்புதாரர்களிடமிருந்து வசூலிக்கப்படும் என ஆணைய ர் (ம) தனி அலுவலர்  முனைவர் வீ.ப. ஜெயசீலன், தெரிவித்தார்கள்.  
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo