Onetamil News Logo

தூத்துக்குடி ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

Onetamil News
 

தூத்துக்குடி ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்டஆட்சித்தலைவர்/ மாவட்டதேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி,  தலைமையில் நடைபெற்றது.


தூத்துக்குடி 2019 மார்ச் 14 ;தூத்துக்குடி ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்டஆட்சித்தலைவர்/ மாவட்டதேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி,  தலைமையில் நடைபெற்றது.
-
தூத்துக்குடிஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து நிகழ்ச்சி மாவட்டஆட்சித்தலைவர்/ மாவட்டதேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி, தலைமையில் நடைபெற்றது.தேர்தல் குறித்து கல்லூரி மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்றார். மேலும்,கல்லூரி வளாகத்தில் தேர்தல் விழிப்புணர்வு சின்னங்களை உள்ளடங்கிய ரங்கோலிபோட்டி மற்றும் சிறந்த வாசகங்கள் எழுதும் போட்டியில் வெற்றிபெற்ற 4 மாணவிகளுக்கு மாவட்டஆட்சித்தலைவர் கேடயங்களை வழங்கினார். 
நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் / மாவட்டதேர்தல் அலுவலர்  பேசியதாவது:
இந்திய தேர்தல் ஆணையம்,தமிழகத்தில் ஒரே கட்டமாகஏப்ரல் 18ம் தேதி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் என10.03.2019 அன்று அறிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில்18 வயதுபூர்த்தியடைந்த இளைஞர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டும் என்பதற்காகவும், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், பார்வையற்றோர்கள் உள்ளிட்ட வாக்காளர்களும் நடைபெறவுள்ள தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்பதற்காகவும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு விழிப்புணர்வு பணிகள் மற்றும் வாக்குச்சாவடிகளில் அடிப்படைவசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நமது மாவட்டத்தில் கடந்த கணக்கெடுப்பின்படி தற்போது 18 வயதுமுதல் 19 வரை 61,000 நபர்கள் வாக்காளர்களாக உள்ளனர். இதில் சுமார் 21,000 நபர்கள் மட்டும்தான் வாக்காளர் பட்டியலில் இதுவரைபெயர் சேர்த்துள்ளார்கள். எஞ்சியுள்ள நபர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முன்வரவேண்டும். 
இன்று தூத்துக்குடி ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி; சிறப்பாக நடைபெற்று வருகிறது.இக்கல்லூரியில் 1,945 மாணவிகள் உள்ளனர். இதில் 1,276 மாணவிகள் முதல் முறையாக வாக்களிக்க உள்ளனர். கல்லூரி தூதர்கள் வாக்காளர் பட்டியலில் இதுவரை பெயர் சேர்க்காத மாணவிகளையும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். மேலும் இந்திய தேர்தல் ஆணையம் இந்த ஆண்டில் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அவர்களே தெரிந்து கொள்ளும் வகையில்; வாக்காளர் ஒப்புகைசீட்டு இயந்திரம் பயன்படுத்தபடவுள்ளது. கல்லூரி தூதர்கள் தங்களது நிறுவனத்தில் பயிலும் மாணவியர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் வாக்காளர் ஒப்புகை சீட்டு இயந்திரம் குறித்து தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நடைபெறவுள்ள தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களித்து 100 சதவீதம் வாக்குப்பதிவுசெய்யவேண்டும் எனமாவட்டஆட்சித்தலைவர் / மாவட்டதேர்தல் அலுவலர் அவர்கள் பேசினார்.
முன்னதாகமாவட்டஆட்சித்தலைவர் / மாவட்டதேர்தல் அலுவலர்  தலைமையில் வாக்குப்பதிவு அவசியம் குறித்து கல்லூரி மாணவிகள்,பேராசிரியர்கள்,அலுவலர்கள் உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர். பின்னர் நடைபெறவுள்ள தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் எனவும்,வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற தெருக்கூத்து மற்றும் விழிப்புணர்வு நடனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர்  பார்வையிட்டார். 
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன், .,உதவிஆட்சியர் (பயிற்சி) மரு.அனு, .,கல்லூரி முதல்வர் சத்யபாமா,பேராசிரியை பழனி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள்,மாணவிகள் கலந்துகொண்டனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo