Onetamil News Logo

தூத்துக்குடி பள்ளிவாசல் பகுதியில் உள்ள துணிக்கடையில் வைத்து வாக்குவாதம் எதிரொலி ;மீன்பிடி துறைமுகத்தில் கொலை. - போலீஸ் எஸ்.பி.ஜெயக்குமார் நேரில் சென்று விசாரணை 

Onetamil News
 

தூத்துக்குடி பள்ளிவாசல் பகுதியில் உள்ள துணிக்கடையில் வைத்து வாக்குவாதம் எதிரொலி ;மீன்பிடி துறைமுகத்தில் கொலை. - போலீஸ் எஸ்.பி.ஜெயக்குமார் நேரில் சென்று விசாரணை 


தூத்துக்குடி 2020 செப் 14 ;தூத்துக்குடி மாவட்டம், தென்பாக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் பகுதியில் ஒருவர் கொலை. - சம்பவ இடத்திற்கு  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
தூத்துக்குடி மாவட்டம்,  முத்தையாபுரம், பாரதி நகர் பகுதியை  சேர்ந்த  ஜோசப் என்பவரது மகன் கபில் (எ) கபில்தேவ் (27). இவருடைய நண்பர்களான சாம்சன் இம்மானுவேல் மற்றும் திரேஸ்புரத்தை சேர்ந்த பழனிச்சாமி மகன் முகுந்தன் ஆகியோர் நேற்று இரவு புது ஆடைகள் வாங்க தூத்துக்குடி பள்ளிவாசல் பகுதியில் உள்ள துணிக்கடைக்கு சென்றுள்ளனர். அங்கு வந்த தாளமுத்துநகரை சேர்ந்த செல்வராஜ் என்பரது மகன் ராஜவேல் (எ) இஸ்ரவேல் என்பவருக்கும்,  சாம்சன் இம்மானுவேல் மற்றும்  முகுந்தன் ஆகியோர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சாம்சன் இம்மானுவேல் தனது நண்பர் கபில்தேவ்விடம் கூறியுள்ளார். இதனையடுத்து கபில்தேவ், சாம்சன் இம்மானுவேலை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்;டு ராஜவேலை காண தூத்துக்குடி மீன்பிடி துறைமுக பகுதிக்கு  சென்றுள்ளார்.அங்கு இருந்த ராஜவேலிடம் இதுகுறித்து சத்தம் போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜவேல் தான் வைத்திருந்த கத்தியால் கபில்தேவை குத்தி கொலை செய்துள்ளார்.
இது குறித்து தகவலறிந்த  தென்பாக காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.  
இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் தூத்துக்குடி  துணை காவல் கண்காணிப்பாளர் கணேஷ்; மேற்பார்வையில் தென்பாக காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன் தலைமையில்  தனிப்படை அமைத்து குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து, கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo