Onetamil News Logo

புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.30 இலட்சம் மானியத்துடன் கூடிய தொழிற்கடன் ;கலெக்டர் தகவல்

Onetamil News
 

புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.30 இலட்சம் மானியத்துடன் கூடிய தொழிற்கடன்  ;கலெக்டர் தகவல்          


தூத்துக்குடி 2019 ஜூன் 13 ;தமிழக அரசின் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.30 இலட்சம் மானியத்துடன் கூடிய தொழிற்கடன் பெறுவதற்கு தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஆர்வமுள்ள தொழில் முனைவோர் விண்ணப்பித்து பயன் பெறலாம் - மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது......
தமிழ்நாட்டில் குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மேம்படவும்; முதல் தலைமுறை தொழில் முனைவோர் நிறுவனங்களைத் தொடங்கவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் 'புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS) தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் பட்டம், பட்டயம் மற்றும் தொழிற்கல்வி படித்த முதல் தலைமுறை தொழில் முனைவோர் சுயமாக தொழில் தொடங்க வசதி செய்யப்பட்டுள்ளது.    
        வயது வரம்பு பொது பிரிவினருக்கு 21க்கு மேல் 35க்குள் இருத்தல் வேண்டும். சிறப்பு பிரிவினர்களான மகளிர், ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முன்னாள் இராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு அதிகபட்ச வயது 45  ஆகும். இத்திட்டத்திற்கு ஆண்டு வருமானம் உச்ச வரம்பு ஏதுமில்லை. பயானளிகள் மூன்று ஆண்டுகளுக்கு குறையாமல் தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
       அனைத்து உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்கள் தொடங்க 25% அரசு மானியத்துடன் (அதிகபட்சம் ரூ.30 இலட்சம்) கடன் வழங்கப்படுகிறது.  இத்திட்டத்தின் கீழ் ரூ.10.00 இலட்சத்திற்கு மேல் அதிகபட்சம் ரூ.5 கோடி வரையான திட்டங்களுக்கு கடன் பெறலாம். இந்த 2019-20 ஆம் நிதியாண்டில் இருந்து கூடுதலாக குளிர் பதன மறுசுழற்சி வாகனம், LPG புல்லட் டேங்கர், ப்ளை ஆஷ் கேரியர் டேங்கர் டிரக், கொள்கலனுடன் கூடிய டிரக், ரோடு ரோலர், பிட்டுமன் மிக்சிங் இயந்திரம் வண்டியுடன், டேங்கர் டிரக், பொருடட்கள் கையாளும் இயந்திரங்கள் கிரேன் போர்க்லிபட், போர்வெல் மற்றும் ரிக்ஸ் வண்டி,  ரெடிமிக்ஸ் கான்கிரிட் இயந்திரம், கான்கிரிட் மிக்சர் மிஷன், ரெக்கவரி வாகனம், கான்கிரிட் குழாய் வாகனம், தொழிற்சாலைகளுக்கு LPG /கேஸ் கொண்டு செல்லும் வாகனம், நடமாடும் உணவக வாகனம், ஆகிய தொழில்களுக்கு இத்திட்டத்தில் கடன்பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட பயானளிகளுக்கு தொழில் முனைவோர் பயிற்சி வழங்கப்படும். வியாபாரம் சம்மந்தப்பட்ட தொழில்களுக்கு  இத்திட்டத்தில் பயன்பெற முடியாது.    
   திட்ட மதிப்பீட்டில் பொதுப் பிரிவினர் 10 சதவீதமும், சிறப்பு பிரிவினர் 5 சதவீதமும் தங்களது பங்காக முதலீடு செய்ய வேண்டும். தவணை தவறாமல் கடனைத் திருப்பி செலுத்தும் தொழில் முனைவோர்களுக்கு கூடுதல் சலுகையாக 3 சதவீத பின்முனை வட்டி மானியமும் வழங்கப்படும்.
       இத்திட்டத்தின்  கீழ் பயன் பெற  விரும்புவோர் www.msmeonline.tn.gov.in/needs  என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். அவர்களது விண்ணப்பம் மாவட்ட தொழில் மையம் மூலம் இணையதளத்தில்; சரிபார்க்கப்பட்டு நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுவர்.
        மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், பைபாஸ் ரோடு சமீபம், தூத்துக்குடி அலுவலகத்தில் தொடர்பு  கொண்டு அறியலாம். ஆர்வமுள்ள தொழில் முனைவோர் இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி, கேட்டுக்கொண்டுள்ளார்;.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo