Onetamil News Logo

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் படைவீரர் கொடிநாள் விழா மற்றும் தேனிர் விருந்து நிகழ்ச்சி   

Onetamil News
 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் படைவீரர் கொடிநாள் விழா மற்றும் தேனிர் விருந்து நிகழ்ச்சி   


தூத்துக்குடி 2018 டிசம்பர் 7; தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் படைவீரர் கொடிநாள் விழா மற்றும் தேனிர் விருந்து நிகழ்ச்சியில் 31 முன்னாள் படைவீரர் / குடும்பங்களுக்கு ரூ.5.84 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,  வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் படைவீரர் கொடிநாள் விழா மற்றும் தேனிர் விருந்து நிகழ்ச்சி இன்று (07.12.2018) நடைபெற்றது.  இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,  கலந்துகொண்டு 31 முன்னாள் படைவீரர் / குடும்பங்களுக்கு ரூ.5.84 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முன்னதாக போரின்போது வீர மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு 1 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. 
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது:- உலகில் அமைதியான நாடுகள்தான் சீரான வளர்ச்சிப்பாதையில் முன்னேற்றமடைய முடியும்.  அங்குதான் தொழில்கள் பெருகும்.  நமது நாடு வளர்ச்சியடைய அமைதியான சூழ்நிலைக்கு முப்படை வீரர்களின் பங்கு மிகவும் அதிகமானதாகும். நம் நாடு அமைதியுடன் இருக்க இரவு பகல், பாராமல் நமக்காக கடினமான பணிகளை செய்து வருகின்றனர். கடினமான பணிகணை செய்து ஓய்வு பெறும் வீரர்களுக்கு  என மக்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் கொடி நாள் நிதி உருவாக்கப்பட்டுள்ளது.  மாநில அளவில் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் தலைமையில் இந்த கொடிநாள் நிதி பெறப்படுகிறது.  இதன் மூலம் முன்னால் படைவீரர் மற்றும் அவரது குடும்பத்திற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.  ஒய்வு பெற்ற இராணுவ வீரர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு உள்ள அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும்.  திருமண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, பார்வையற்றோர் நிதியுதவி உள்ளிட்ட அனைத்து உதவிக்கும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் 2017-2018ம் ஆண்டில் முன்னால் படைவீரர் நல அலுவலகத்தின் மூலம் 1 கோடியே 14 இலச்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், முன்னால் ராணுவ வீரர்களுக்கு தொழில் தொடங்கிட தேவையான உதவிகளும் செய்து தரப்படும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கொடி நாள் நிதி கடந்த ஆண்டு ரூ.87.00 லட்சம் இலக்க நிர்ணயிக்கப்பட்டு 128 சதவீதமாக ரூ.115.00 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது.  இந்த ஆண்டு 1.00 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடினமான பணியிலிருந்து ஒய்வு பெற்றுள்ளவர்களுக்கு உதவிடும் வகையில் இந்த ஆண்டும் குறியீட்டினைவிட கூடுதலான நிதியினை வசூல் செய்திட வேண்டும் என பேசினார்.
தொடர்ந்து படைப்பணி முடித்து ஒய்வுபெற்ற படைவீரர்கள், சர்ந்தோர், போர் விதவையர்களுக்கு தேனிர் விருந்து அளிக்கப்பட்டது. 
இந்த விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.வீரப்பன், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரான்ஜீத் சிங் கலோன்,  தூத்துக்குடி மாவட்ட முப்படை வீரர் வாரியம் உப தலைவர் லெப்.கர்னல் சுந்தரம், தூத்துக்குடி முன்னாள் படைவீரர் நல அலுவலகம் உதவி இயக்குநர் லெப்.கர்னல்.மு.நாகராஜன், தூத்துக்குடி முன்னாள் படைவீரர் நல அலுவலகம் கண்காணிப்பாளர் எஸ்.சுஜாதா மற்றும் அலுவலர்கள், முன்னாள் படைவீரர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo