Onetamil News Logo

மத்திய அரசு மக்கள் தொடர்புகள்  அலுவலகம் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி இணைந்து நடத்திய தூய்மை பாரத இயக்கம் ,சிறப்பு விழிப்புணர்வு முகாம் 6ம் தேதி தொடங்கி, நிறைவு நாள் நிகழ்ச்சி 

Onetamil News
 

மத்திய அரசு மக்கள் தொடர்புகள்  அலுவலகம் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி இணைந்து நடத்திய தூய்மை பாரத இயக்கம் ,சிறப்பு விழிப்புணர்வு முகாம் 6ம் தேதி தொடங்கி, நிறைவு நாள் நிகழ்ச்சி   


                                                                                                                                             
தூத்துக்குடி 2018 டிசம்பர் 7; தூத்துக்குடியில் தூய்மை பாரத இயக்கம் (நகரம்) சிறப்பு விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தொடங்கி வைத்தார். 
தூத்துக்குடியில் மத்திய அரசு மக்கள் தொடர்புகள்  அலுவலகம் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி இணைந்து நடத்திய தூய்மை பாரத இயக்கம் ,சிறப்பு விழிப்புணர்வு முகாம் 6ம் தேதி தொடங்கி, நிறைவு நாள் நிகழ்ச்சி இன்று (07.12.2018) தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,  கலந்துகொண்டு வ.உ.சி. கல்லூரி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்கள். 
இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர்  ஜனவரி 1 -2019 முதல் மறுசுழற்சி இல்லாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களாக மறுசுழற்சி இல்லாத பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்ப்பதை குறித்து பள்ளி, கல்லூரி மற்றும் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மாத இறுதிக்குள் மாவட்ட அளவிலான பிளாஸ்டிக் விழிப்புணர்வு தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்தப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  மேலும் மத்திய அரசின் முக்கிய திட்டமான தூய்மை பாரத இயக்க திட்டத்தின்கீழ் பொதுமக்கள் தங்களது வீட்டில் உள்ள கழிப்பறைகளை பயன்படுத்துவது குறித்தும், சுற்றுப்புறத்தினை தூய்மையாக வைத்தால் அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, தூத்துக்குடி மாவட்டம் ஏற்கனவே 100 சதவீதம் திறந்தவெளியில் மலம் கழித்தல் இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. தூய்மை பாரதம் இயக்கம் திட்டம் (தூய்மை கணக்கெடுப்பு ஊரகம்) சிறப்பாக செயல்படுத்தியமைக்கான தூத்துக்குடி மாவட்டத்திற்கு இந்திய அளவில் 7வது இடமும், தென்னிந்திய அளவில் 2வது இடமும் பிடித்து மத்திய அரசின் சான்றிதழ்; பெறப்பட்டது. பொதுமக்கள் தங்களது வீட்டில் உள்ள கழிப்பறைகளை முறையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும.; மேலும் தங்களது வீட்டின் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பைகள்  தனியாக பிரித்து  துப்புரவு பணியாளர்களிடம் வழங்க வேண்டும். கை கழுவும் பழக்கத்தினை சிறுவயதில் இருந்து கடைப்பிடிக்க வேண்டும். கை கழுவுவதினால் ஏற்படும் நன்மைகள் குறித்து நண்பர்கள், உறவினர்கள் ஆகியோர்களிடம் எடுத்துக்கூறி விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளில் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத வளாகமாக மாற்றிட பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சுத்தமாக இருந்தால்தான் வருங்கால சந்ததியினர் ஆரோக்கியமாக வாழ முடியும் என்பதை மனதில் உறுதிகொண்டு செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவித்தார்.  
 தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர்  தூய்மை பாரத இயக்கத்தின் பணிகளை சிறப்பாக செயல்படுத்திய நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களையும், கல்லூரி மாணவிகளுக்கு துணிப்பைகளையும் வழங்கினார். பின்னர் கோடாங்கி கலைக்குழுவினரின் கலைநிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.  
இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர் மருத்துவ பணிகள் மரு.பரிதாசெரின், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் திட்ட அலுவலர் எஸ்.முத்துலட்சுமி, மத்திய அரசுகள அலுவலகம் தகவல் கள விளம்பர உதவி அலுவலர் மு.ஜெயகணேஷ், வ.உ.சி. கல்லூரி முதல்வர் முனைவர். சொ.வீரபாகு, தூத்துக்குடி பெண்கள் ஆலோசனை குழுமம் செயலாளர் முனைவர்.ஜி.கிருஷ்ணவேணி கலந்துகொண்டனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo