Onetamil News Logo

அ.தி.மு.க. ஆட்சியில் பல மடங்கு உயர்த்தப்பட்ட சொத்துவரியை குறைத்திட தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி வரும் 14ம்-தேதி ஆர்ப்பாட்டம்

Onetamil News
 

அ.தி.மு.க. ஆட்சியில் பல மடங்கு உயர்த்தப்பட்ட சொத்துவரியை குறைத்திட தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி வரும் 14ம்-தேதி ஆர்ப்பாட்டம்   


தூத்துக்குடி 2019 ஜூன் 11 ;அ.தி.மு.க. ஆட்சியில் பல மடங்கு உயர்த்தப்பட்ட சொத்துவரியை குறைத்திட தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி  தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் : அனைவரும் திரளாக கலந்து கொள்ள வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் பி. கீதாஜீவன் எம்.எல்.ஏ அழைப்பு விடுத்துள்ளார்.
                                                                                                                                      இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.... அ.தி.மு.க. ஆட்சியில் தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகளின் நிர்வாக சீர்கேட்டால் மாநகராட்சி பகுதிகளில் எந்தவித அத்தியாவசிய பணிகளும் நடைபெறவில்லை. குறிப்பாக குடிநீர் வழங்குவதை முறைப்படுத்துதல், சாக்கடை கால்வாய் தூர்வாராமல் இருப்பது ,தெருவிளக்கு சாலை வசதி, பாதாள சாக்கடை வசதி போன்ற அடிப்படை வசதிகள்; முழுமையாக செய்து தரப்படவில்லை.
                                                                                                                                         மேலும் அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் அரசு அலுவலர்கள் மூலம்  தூத்துக்குடி பழைய நகராட்சி பகுதி மற்றும் மாநகராட்சியோடு இணைந்த ஊராட்சி பகுதிகளுக்கான சொத்துவரி, குடிநீர் கட்டணம், குப்பைவரி என பல மடங்கு கட்டணத்தை உயர்த்தியுள்ளார்கள்.  ஏற்கனவே பழைய வரித்தொகையை அதுவும் 2017 – 2018  ஆண்டிற்கு வரியை கட்டியவர்களும் கூடுதலாக புதிய வரி கட்ட வேண்டும் என நோட்டீஸ் கொடுத்துள்ளார்கள்.  பலமடங்கு வரி உயர்த்தியதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
எனவே பல மடங்கு உயர்த்தப்பட்ட சொத்துவரி, குடிநீர்கட்டணம், குப்பை வரியை உடனடியாக குறைத்திட வலியுறுத்தி தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வருகிற 14.06.19  வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு வி.வி.டி.ரோடு டூவிபுரம் 5வது தெரு சந்திப்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.
    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. பாராளுமன்ற குழு துணை தலைவரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி  தலைமை தாங்குகிறார்.
    எனவே மாவட்டக்கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூh,; மற்றும் ஊராட்சிக் கழகச் செயலாளர்கள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என அனைவரும் பெருந்திரளாகக் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதில் கூறியுள்ளார்.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo