Onetamil News Logo

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ; கனிமொழி எம்.பி.பங்கேற்றுப் பேசினார். 

Onetamil News
 

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ; கனிமொழி எம்.பி.பங்கேற்றுப் பேசினார்.   


தூத்துக்குடி  2019 செப் 9 ;தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ; கனிமொழி எம்.பி.பங்கேற்றுப் பேசினார்.                                                                                               
  தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்  கலைஞர் அரங்கில் நடந்தது. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன் வரவேற்றார். 
 மாநில இளைஞர் அணி துணை செயலாளர் தாயகம் கவி எம்.எல்.ஏ   முன்னிலை வகித்தார்.இந்த கூட்டத்தில், மாவட்ட துணை செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பிரதீப் கஸ்பார், ஆறுமுகம், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் ஜான் அலெக் சாண்டர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மாநகர, மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். 
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசுகையில்... "இளைஞரணி என்பது தளபதி அவர்களால் உருவாக்கப்பட்டது இளைரணியை வளர்க்க பலப்படுத்த தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு பகுதிகளிலும் கிராமங்களிலும் கொடியேற்றி அவரது பாதங்கள் படாத ஒரு கிராமமோ பகுதியோ இருக்கின்றது என்றால் இல்லை என்று பெருமையாக சொல்ல கூடிய அளவிற்கு இருக்கின்றோம் அந்த அளவிற்கு அவர் உழைத்து இருக்கின்றார். இன்று திராவிட முன்னேற்ற கழகத்தில் முக்கிய தலைவர்கள் அனைவரும் இளைஞர் அணியில்  இருந்து வந்தவர்கள்தான் "
"இன்று இளைஞரணி பொறுப்பை தளபதியின் மகன் உதயநிதி  ஏற்றுகொண்டு இருக்கின்றார் அவர் எளிமையாக பழககூடியவர். திராவிட முன்னேற்ற கழக பாரம்பரியத்தில் இருந்து வந்தவர்கள் நிச்சயமாக இளைஞரணியை எப்படி ஸ்டாலின் முன்னெடுத்து சென்றாரோ அதைபோல் இளைஞரணி பொறுப்பை உதயநிதி  முன்னெடுத்து செல்வார் என்று நம்பிக்கை அனைவருக்கும் உள்ளது. அதற்கு உதாரணமாக அவர் பொறுப்பேற்றவுடன் அதிகமாக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற கட்டளை விடுத்துள்ளார்."
"இவை எல்லாவற்றையும் விட இளைஞரணி தீர்மானங்களில் ஒன்றான குளங்கள், மற்றும் நீர்நிலைகளை தூர்வாறும் தீர்மானம் என்பது பாராளுமன்ற உறுப்பினராக எனக்கு பிடித்த தீர்மானம்" என்று கனிமொழி எம்பி தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசினார்.
 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo