Onetamil News Logo

தூத்துக்குடியில் பொதுப்பணித்துறையினர் அலட்சியப்போக்கு காரணமாக உப்பாற்று ஓடையில் தனியார் ஆக்கிரமிப்புகள் ;அதிகாரிகள் சிறைபிடிப்பு ;தாசில்தார் செல்வகுமார் சமரசம் 

Onetamil News
 

தூத்துக்குடியில் பொதுப்பணித்துறையினர் அலட்சியப்போக்கு காரணமாக உப்பாற்று ஓடையில் தனியார் ஆக்கிரமிப்புகள் ;அதிகாரிகள் சிறைபிடிப்பு ;தாசில்தார் செல்வகுமார் சமரசம் 


தூத்துக்குடி 2020 ஜூலை 8 ; தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் அமைந்துள்ள குளம் பொதுப்பணித்துறையினர் அலட்சியப்போக்கு காரணமாக நீர் நிலைகளில் நீர் தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 
தூத்துக்குடி கோரம்பள்ளம் குளம் 1888 ல் ஆங்கிலேயர்களால் 48 மடைகளுடன் உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் 1905 ம் ஆண்டு புனரமைப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளது. அதன் பின் பொதுப்பணித்துறையினர் 48 மடைகளில், இரு மடைகளை இணைத்து ஒன்றாக்கி 24 மடைகளாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் ஆழம் 12 அடியாக இருந்தது. பாசன பரப்பு: இக் குளத்தில் இருந்து தூத்துக்குடி பகுதியில் உள்ள 2 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெற்று வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடம்பூர், கயத்தாறு, மணியாச்சி, ஓட்டப்பிடாரம், கொம்பாடி ஓடை ஆகிய பகுதிகளில் இருக்கும் கண்மாய்கள் நிரம்பிய பின்பு வரும் உபரி நீர் இதில் தேக்கப்படும். தற்போது இந்த நீர் வரத்துக்கால்வாய்கள் ஆக்கிரமிப்பு காரணமாக சுருங்கிவிட்டது. இதற்கு ஏற்றார் போல் பாசன நிலங்கள் 1,800 ஏக்கராக குறைந்துவிட்டது. இருந்தும் ஒரு போக சாகுபடிக்கு விவசாயிகள் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. உப்பாற்று ஓடையின் இரு புறமும் உள்ள கரைகள் பலப்படுத்தவேண்டும் இந்த ஓடையின் இருபுறங்களையும் ஆய்வு செய்வதே கிடையாது.ஏதோ வெள்ளம் வந்தால் மட்டும் அதிகாரிகள் ஆட்டம் ஆடுகின்றனர்.மற்றபடி செப்பனிடுவதே கிடையாது.
நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள இடங்கள்  ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனை அதிகாரிகளால் அகற்ற முடியவில்லை. காரணம் தனியார் கம்பெனிகள்  தான் இதனை செய்துள்ளதாகவும், விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். 
பொதுப்பணித்துறை அதிகாரிகளும் இந்த குளத்தை பார்த்து பராமரிப்பு செய்வதில்லை. இந்த குளத்தை பற்றி பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆற்றின் ஓடைகளை சென்று பார்ப்பதே கிடையாது.  அந்தோணியார்புரம், மகிழம்புரம், மறவன் மடம், செக்காரக்குடி, பேரூரணி ஆகிய பகுதிகளில் வெள்ளம் சூழும். உப்பாற்று ஓடையின் இரு புறமும் உள்ள கரைகள் உடைந்து வீரநாயக்கன்தட்டு, காலாங்கரை, அத்திரமரப்பட்டி, ஜே.எஸ்.நகர், சுந்தர் நகர், பொட்டல்காடு, முள்ளக்காடு ஆகிய கிராமங்களில் வெள்ளம் சூழும் அபாயம் இருக்கிறது.  இதற்கு காரணம் பொதுப்பணித்துறையினர் ஓடையின் கரைகளை பலப்படுத்தாதே காரணம். கரைகளில் விரிசல்  பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதனை கண்டு கொள்வதில்லை. கரைகளை பலப்படுத்த வேண்டும், ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி விவசாயிகள் புகார் கொடுத்தும் இன்று வரை பெயரளவிற்கே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடலுக்கு வீணாகும் செல்லும் நீரை சேமிக்க வீரநாயக்கன் தட்டு, திருச்செந்தூர் உப்பாற்று ஓடை பாலம், கோவில்பிள்ளை நகர் ஆகிய பகுதிகளில் தடுப்பணை கட்டினால், ஒரளவுக்கு வீணாகும் நீரை சேமிக்க முடியும். அதன் மூலம் அப்பகுதி மக்கள் குடி நீர், விவசாய பாசனங்களுக்கும் பயன்படும்.வகையில் ஓடைகளில் தடுப்பணை கட்டினால் அதிகளவு தண்ணீர் சேமிக்க முடியும்.  ஒரு போக சாகுபடியை இருபோக சாகுபடியாக அதிகரிக்க முடியும். பொதுப்பணித்துறை அதிகாரிகள் குளத்தை முறையாக பராமரிப்பு செய்ய வேண்டும். அரசு அதற்கான நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும். 
 கடந்த 2015ல் ஏற்பட்ட பெருவெள்ளத்தின்போது, உப்பாற்று ஓடையில் தனியார் ஆக்கிரமிப்புகள், சீமைக் கருவேல மரங்கள் அதிகளவில் இருந்ததால் தூத்துக்குடி நகர் பகுதிக்குள் வெள்ளம் சூழ்ந்தது . 
இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ரூ.27.50லட்சத்தில் கரைகளை பலப்படுத்தவும், நிரந்தரமாக தூர்வாரும் பணிகளுக்கு ரூ.58.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கப்பட்டது. மேலும் தூத்துக்குடி அத்திமரப்பட்டியில் உப்பாற்று ஓடையில் தனியார் கம்பெனிகளின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் இதுகுறித்து தாமிரபரணி வடகால் கோரம்பள்ளம் குளம் பாசனர் சங்கம் மடை எண் -2 நீரினை பயன்படுத்துவோர் சங்கம் எண் 60, முள்ளக்காடு,முத்தையாபுரம் ,அத்திமரப்பட்டி கிராம விவசாயிகள் சங்கத் தலைவர் அழகுராஜா  பல்வேறு கோரிக்கைளை தெரிவித்துள்ளார். 
அத்திமரப்பட்டி- வீரநாயக்கன் தட்டு பகுதிகளில் ஓடும்  உப்பாற்று ஓடை கரைகளை பலப்படுத்தும் பணிகள் பொதுப்பணித்துறை மூலம் நடந்து வருகிறது. இந்த நிலையில், வீரநாயக்கன் தட்டு பகுதியில் பொதுப்பணித் துறையினர் ஓடையை குறுக்கி கரையை பலப்படுத்தும் பணிகளை செய்து வருவதாக விவசாயிகள் சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி இன்று அப்பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியருக்கு தவறான தகவலை கொடுப்பதாக அத்திமரப்பட்டி விவசாயிகள் சங்கத்தினர் குற்றம்சாட்டினர். இதையடுத்து ஆட்சியர் அங்கிருந்து சென்றுவிட்டார். 
இந்த நிலையில், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் பத்மா, உதவி செயற் பொறியாளர் பாலசுப்பிரமணியம், உதவி பொறியாளர் ரத்னம் ஆகியோர் வந்த வாகனத்தை விவசாயிகள் சங்கத் தலைவர் அழகுராஜா, செயலாளர் சேகர், பொருளாளர் எஸ்.கே.எஸ் .கந்தசாமி, உப்பார் ஓடை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் ஜோதிமணி, வியாபாரிகள் மாநில இளைஞர் அணி செயலாளர் தெர்மல் ராஜா, மார்சிஸ்ட் புறநகர் செயலாளர் ராஜா, நாம் தமிழர் கட்சி நிர்வாகி வேல்ராஜ் மற்றும் விவசாயிகள் 100க்கும் மேற்பட்டோர்  முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சுமார் 2 மணி நேரம் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து அங்கு வந்த தூத்துக்குடி தாசில்தார் செல்வகுமார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதால் அதில் அவர்கள் சமாதானம் அடைந்து தான் வாகன மறியலை கைவிட்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo