Onetamil News Logo

வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்களில் மகளிர் குழுவினர் வாங்கியுள்ள கடனுக்கு 6மாதத்திற்கு வட்டி, தவணைத்தொகை வசூலிக்ககூடாது என்று கோரிக்கை

Onetamil News
 

வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்களில் மகளிர் குழுவினர் வாங்கியுள்ள கடனுக்கு 6மாதத்திற்கு வட்டி, தவணைத்தொகை வசூலிக்ககூடாது என்று கோரிக்கை


தூத்துக்குடி 2020 மார்ச் 26 ;வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்களில் மகளிர் குழுவினர் வாங்கியுள்ள கடனுக்கு 6மாதத்திற்கு வட்டி, தவணைத்தொகை வசூலிக்ககூடாது என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கூட்டாம்புளி பெருந்தலைவர் வாழை உற்பத்தியாளர்கள் சங்க இயக்குநர் சிவஞானபுரம் வெற்றிவேல் என்பவர் தமிழக அரசிற்கும், கலெக்டர் சந்தீப் நந்தூரிக்கும் அனுப்பியுள்ள கோரிக்கை மனு: உலக நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் அனைத்து மக்களும் பெரும் அச்சத்திற்கு ஆளாகி அவதிப்பட்டு வருகின்றனர்.
ஏற்றுமதி, இறக்குமதி, கட்டுமானத் தொழில் என அனைத்துத்தொழில்களும் முடங்கிப்போய் தொழிலாளர்கள் அனைவரும் வேலை இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வருமானம் இல்லாத நிலையில் ஒவ்வொரு நாளையும் மிகவும் சிரமத்துடனே சமாளித்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுத்திட ஒவ்வொரு மாவட்டங்களும் அதிரடியாக மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. பஸ், ரயில் என எந்த வாகனங்களும் இயக்கப்படாத நிலையில் பொதுமக்கள் வீடுகளை விட்டே வெளியே செல்ல முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
தற்போதுள்ள சூழலில் தனியார் நிறுவன பணியாளர்கள், கட்டுமானத்தொழிலாளர்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வந்த பெண்கள், விவசாயத்தொழிலாளர்கள் என அனைவரும் வேலை இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இப்படிப்பட்ட சூழலில், நகரங்கள் மட்டுமல்லாது கிராமங்களிலுள்ள மகளிர்கள் தங்கள் பகுதியிலுள்ள மகளிர் குழுக்கள் மூலமாக வீட்டு தேவைகளுக்காக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களிடம் இருந்து வட்டியுடன் கூடிய கடன் பெற்றுள்ளனர்.
கொரோன வைரஸ் தாக்கத்தால் கடந்த இரண்டுவார காலமாக வேலை எதுவும் இல்லாத நிலையில் வங்கிகளில் வாங்கியுள்ள இந்த கடனையும், அதற்கான வட்டி மற்றும் தவணைத்தொகையையும் குறிப்பிட்ட வகையில் செலுத்த முடியாத நிலை மகளிர் குழுவினர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இதுபோன்று சாதாரணத் தொழிலாளர்கள், கார், ஆட்டோ போன்ற தனியார் வாடகை வாகன உரிமையாளர்கள், வியாபாரிகள், தனியார் நிறுவன பணியாளர்கள் வங்கிகளில் வாங்கியுள்ள கடன் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் மூலமாக வாங்கியுள்ள பைக், ஆட்டோ, கார் போன்ற வாகனங்களுக்கான வாகனக்கடன், அதற்கான தவணைத்தொகை போன்றவற்றை செலுத்த முடியாத இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே, வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் மகளிர் குழுவினர், தொழிலாளர்கள், வணிகர்கள், வியாபாரிகள், தனியார் வாடகை வாகன உரிமையாளர்கள் என பொதுமக்கள் வாங்கியுள்ள கடனை திருப்பி செலுத்திட குறைந்தது 6மாத காலத்திற்கு அவகாசம் அளிப்பதுடன், அதுவரை தவணைத்தொகை மற்றும் அதற்கான வட்டியை கட்டுவதில் இருந்து முற்றிலமாக விலக்கு அளித்திடவேண்டும்.
இந்த 6மாத காலத்திற்கும் அந்த வாகனங்களையே மூலதனமாக கொண்டு வாழந்துவரும் அவர்களிடம் இருந்து நிதி உதவியுடன் வாங்கியுள்ள வாகனங்களை பறிமுதல் செய்திடும் நடவடிக்கைகளையும் முற்றிலுமாக தவிர்த்திடவேண்டும்.

இதில், மத்திய, மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுத்திடவேண்டும், வங்கிகள் மற்றும் தனியார் நிநி நிறுவனங்கள் உரிமையாளர்களிடம் இருந்து வாகனங்களை பறிமுதல் செய்யமாட்டோம் என்பதற்கு உத்தரவாதம் அளித்திடவும் வலியுறுத்திடவேண்டும்.
இதன்மூலமாக வேலை எதுவும் இன்றி வருமானம் இல்லாமல் பரிதவித்து வரும் தொழிலாளர்கள், டிரைவர்கள், மகளிர்கள் உள்ளிட்டவர்களை பாதுகாத்திடவேண்டும். இதற்கு மாவட்ட கலெக்டரான தாங்கள் மத்திய, மாநில அரசுகளிடம் எடுத்துரைத்து உரிய உத்தரவாதம் அளித்திட முன்வரவேண்டும், தமிழக அரசும் இதில் தாமதமின்றி உரிய நடவடிக்கை எடுத்திடவேண்டும் என்று அதில் கூறியுள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo