Onetamil News Logo

தூத்துக்குடி இறைச்சிக்கடைகளில் இறைச்சி வெட்டும் பணியாளர்கள் மாஸ்க் போட்டு இறைச்சியை வெட்டி சுகாதாரமாக வழங்க வேண்டும் ; வக்கீல் செல்வம் கிறிஸ்டோபர் குற்றசாட்டு

Onetamil News
 

தூத்துக்குடி இறைச்சிக்கடைகளில் இறைச்சி வெட்டும் பணியாளர்கள் மாஸ்க் போட்டு இறைச்சியை வெட்டி சுகாதாரமாக வழங்க வேண்டும் ; வக்கீல் செல்வம் கிறிஸ்டோபர் குற்றசாட்டு


தூத்துக்குடி 2018 மே 13 ;தூத்துக்குடி இறைச்சிக்கடைகளில் இறைச்சி வெட்டும் பணியாளர்கள் மாஸ்க் போட்டு இறைச்சியை வெட்டி சுகாதாரமாக வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து சட்ட உரிமைகள் இயக்கம் நிறுவன தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபர் கூறியதாவது..   தூத்துக்குடி உட்பட்ட பகுதிகளில் உள்ள கோழி இறைச்சி,மாட்டு இறைச்சி மற்றும் ஆட்டு இறைச்சிக்கடைகளில், திறந்த வெளியில் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்படுகிறது. விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில், ஆங்காங்கே தற்காலிக இறைச்சி கடைகள் போடப்பட்டு விற்பனையும் அமோகமாக நடந்து வருகிறது.சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்படுவதாகவும்; இறந்த மாடுகள் மற்றும் நோயுற்ற மாடுகளை இறைச்சியாக விற்பனை செய்வதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இறைச்சி கடைகளை வரை முறைப்படுத்துவது உணவுபாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் தங்க விக்னேஷ்  சிறப்பாக செய்து வருகிறார்.குறிப்பாக   உணவு பாதுகாப்பு சட்டத்தின் படி, சுகாதாரமான முறையில் இறைச்சி விற்பனை செய்யப்பட வேண்டும்; சில்வர் கொக்கி மற்றும் கத்தியே பயன்படுத்த வேண்டும்; கண்ணாடிப் பேழை அமைக்கப்பட வேண்டும்; தரமான மரக்கட்டைகள் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி இறைச்சிக்கடைகளில் இறைச்சி வெட்டும் பணியாளர்கள் மாஸ்க்  போட்டு இறைச்சியை வெட்டி சுகாதாரமாக வழங்கவேண்டும்.இறைச்சி வெட்டும் பணியாளர்கள் பேசிக்கொண்டே இறைச்சியை வெட்டுவதால் அவர்களது எச்சில் இறைச்சியில் விழுகிறது,இதனால் நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. இறைச்சிக்கடைகள் அதிகளவு வருவதை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.
இறைச்சி சுகாதாரமான சுத்தமான முறையில், வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; இறைச்சிக்கழிவுகள் பாதுகாப்பான முறையில், சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்படும். சரியான முறையில் செயல்படாத மாட்டு இறைச்சி கடைகள் அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்று கூறினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo