Onetamil News Logo

தூத்துக்குடி அன்னம்மாள் கல்லூரியில் மகாத்மா காந்தி 150வது பிறந்த நாள் விழா ;எஸ்.பி.பங்கேற்பு 

Onetamil News
 

தூத்துக்குடி அன்னம்மாள் கல்லூரியில் மகாத்மா காந்தி 150வது பிறந்த நாள் விழா ;எஸ்.பி.பங்கேற்பு  


 தூத்துக்குடி 2019 அக்டோபர் 10 ;தூத்துக்குடி அன்னம்மாள் கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற மகாத்மா காந்தி அவர்களின் 150வது பிறந்த நாள் விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன்,  தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். 
ஜெயண்ட் குரூப் ஆப் தூத்துக்குடி மற்றும் சகேலி  ஆகியவை தூத்துக்குடி அன்னம்மாள் கல்வியியல் கல்லூரியுடன் இணைந்து மகாத்மா காந்தி அவர்களின் 150வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.  இவ்விழாவிற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இவ்விழாவை முன்னிட்டு  ‘காந்தியின் சிந்தனைகளும் இன்றைய சமுதாயமும்” என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடைபெற்றது. இந்த பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற முதல் 3 மாணவிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்அவர்கள் பரிசு வழங்கி பாராட்டினார். 
பின் சுதந்திர போராட்டத்தில் மகாத்மா காந்தி பங்கேற்ற நிகழ்ச்சியை சிறப்பிக்க வெளியிட்ட இந்தியா மற்றும் வெளிநாட்டு அரிய வகை தபால் தலைகள், தபால் உறைகள் வைக்கப்பட்ட கண்காட்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 
இவ்விழாவில் மாவட்ட முப்படை வீரர் வாரியத்தின் உப தலைவர் லெப்டிணென்ட் கர்ணல் சுந்தரம், செந்தில் கண்ணன், ஜெயகிருஷ்ணன், வழக்கறிஞர்  சொர்ணலதா, தென்பாகம் காவல் ஆய்வாளர் கிருஷ்ணகுமார், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் பேச்சிமுத்து ஆகியோர் கலந்துகொண்டனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo