Onetamil News Logo

ஸ்ரீசித்தர் பீடத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்

Onetamil News
 

ஸ்ரீசித்தர் பீடத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்


தூத்துக்குடி 2018 செப் 13 ;தூத்துக்குடி அருகேயுள்ள கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் பீடத்தில் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-மஹா காலபைரவர் மற்றும் பரிவாரத்தெய்வங்கள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
ஸ்ரீசித்தர் பீடத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீஅதிர்ஷ்ட விநாயகருக்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி இந்தாண்டிற்கான விநாயகர் சதுர்த்தி விழா அபிஷேகங்கள், அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகளுடன் பக்தர்கள் படைசூழ கோலாகலமாக நடைபெற்றது.
                                                                                                                                       அதிகாலையில், ஸ்ரீஅதிர்ஷ்ட விநாயகருக்கு ஸ்ரீசித்தர் பீடத்தின் சுவாமிகள் சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் பால், சந்தனம், தயிர், பன்னீர், இளநீர், தேன், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட 16வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து ஸ்ரீஅதிர்ஷ்ட விநாயகர் ''கல்யாண மாப்பிள்ளை'' போன்று தலைப்பாகையுடன் கூடிய சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுக்க தீபாரதனைகளுடன் கூடிய சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீசித்தர் பீடத்தின் சுவாமிகள் சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் வழிபாட்டுக்குழுவினர் மற்றும் மகளிர் அணியினர் செய்திருந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo