Onetamil News Logo

தூத்துக்குடியில் கொரோனா வைரஸ் சிகிச்சை பெற்று பூரண குணம் அடைந்த 19 நபர்களை கலெக்டர் முன்னிலையில் வீட்டுக்கு வழி அனுப்பி வைக்கும் விழா 

Onetamil News
 

தூத்துக்குடியில் கொரோனா வைரஸ் சிகிச்சை பெற்று பூரண குணம் அடைந்த 19 நபர்களை கலெக்டர் முன்னிலையில் வீட்டுக்கு வழி அனுப்பி வைக்கும் விழா 


தூத்துக்குடி 2020 மே 28 ; தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பூரண குணம் அடைந்த 19 நபர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,முன்னிலையில் பழங்கள், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கூடிய நிலவேம்பு கசாய பொடி மற்றும் ஆரோக்கியம் சிறப்பு திட்டத்தின் மூலம் அமுக்குரா மாத்திரை, நெல்லிக்காய் லேகியம்  ஆகியவற்றை வழங்கி வீட்டுக்கு வழி அனுப்பி வைக்கப்பட்டது
தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பூரணம் குணம் அடைந்த 19 நபர்களை வீட்டுக்கு வழி அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி இன்று (28.05.2020) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,முன்னிலையில் குணம் அடைந்த 19 நபர்களுக்கு பழங்கள், சித்தா மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கூடிய நிலவேம்பு கசாய பொடி, யோக மற்றும் இயற்கை மருத்துவம் மற்றம் ஹோமியோபதி துறை சார்பில் ஆரோக்கியம் சிறப்பு திட்டத்தின் மூலம் அமுக்குரா மாத்திரை, நெல்லிக்காய் லேகியம் ஆகியவற்றை வழங்கப்பட்டது. மேலும்; மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,குணம் அடைந்த நபர்களிடம் 14 நாட்களை தனிமைப்படுத்தி கொள்ளுமாறும், மருத்துவர்கள் வழங்கிய அறிவுரைகளை தொடர்ந்து பின்பற்றுமாறும் அறிவுறுத்தினார்.  
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 27.05.2020 அன்று வரை 194 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டார்கள். அரசு தெரிவித்துள்ள வழிமுறைகளின்படி தொடர்ந்து 10 நாட்கள் கண்காணிக்கப்பட்டதில்  19 நபர்களை கொரோனா வைரஸ் தொற்று நோய் இல்லாத நிலை ஏற்பட்டதால் இன்று அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், சித்தா மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கூடிய நிலவேம்பு கசாய பொடி மற்றும் இந்திய மருத்துவம் மற்றம் ஹோமியோபதி துறை சார்பில் ஆரோக்கியம் சிறப்பு திட்டத்தின் மூலம் அமுக்குரா மாத்திரை, நெல்லிக்காய் லேகியம் ஆகியவற்றை வழங்கப்பட்டது. யோகா மற்றும் இயற்கை மருத்துவ துறையிலிருந்து ஆரோக்கிய பானம் பவுடர் மற்றும் மன அமைதிக்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தங்கள் வீட்டிலே 14 நாட்களை தனிமைப்படுத்தி கொள்ளுமாறும், மருத்துவர்கள் வழங்கிய அறிவுரைகளை தொடர்ந்து பின்பற்றுமாறும் தெரிவிக்கப்பட்டது.
தற்போது 109 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.  இவர்கள் அனைவரும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளார்கள். இவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் மருத்துவர்கள் குழுவால் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 3 வேளை சத்தான உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. 
தூத்துக்குடி மாவட்டத்திற்கு வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டத்தில் இருந்து வருகை தரும் நபர்களை 15 சோதனை சாவடிகளில் பரிசோதனை செய்யப்பட்டு கொரான்டைன் முகாம்களில் தங்க வைக்கப்படுகிறது. நேற்றைய தினம் மும்பையில் இருந்து சிறப்பு ரயில் திருநெல்வேலி மாவட்டத்திற்கு வந்தது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 184 நபர்கள் வருகை தந்தார்கள்.  இவர்கள் அனைவருமே கொரான்டைன் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று நோய் இல்லை என்ற அறிக்கை பெற்றதுடன் வீட்டுக்கு அனுப்பி 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். கொரோனா தொற்று நோய் உறுதி செய்யப்பட்ட நபர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உரிய சிகிச்சை அளிக்கப்படும். 
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு தெரிவித்துள்ள வழிமுறைகளின்படி கொரோனா தொற்று நோய் தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருவதால் சமூக பரவல் ஏற்படவில்லை என தெரிவித்தார். 
நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) பிரித்விராஜ், தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.ரேவதிபாலன், உதவி உறைவிட மருத்துவர் மரு.ஜெயபாண்டியன், கொரோனா தொற்று நோய் கட்டுப்படுத்தும் நோடல் அலுவலர் மரு.இளங்கோ, மருத்துவ கண்காணிப்பாளர் மரு.லலிதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் மரு.பிரேமலதா, சித்தா மருத்துவர் சங்கர ராமசுப்பிரமணியன், கொரோனா பிரிவுக்கான மருத்துவர் மரு.பாலமுருகன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo