Onetamil News Logo

தூத்துக்குடி மக்கள் குறைதீர்க்கும் முகாமில் ஸ்ரீராம் நிதி நிறுவனம் குறித்து கலெக்டர்-யிடம் விவசாயி புகார்

Onetamil News
 

தூத்துக்குடி மக்கள் குறைதீர்க்கும் முகாமில் ஸ்ரீராம் நிதி நிறுவனம் குறித்து கலெக்டர்-யிடம் விவசாயி புகார்    


 தூத்துக்குடி 2019 ஜூன் 17 ; தூத்துக்குடியில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் ;ஸ்ரீராம் நிதி நிறுவனம் குறித்து கலெக்டர்-யிடம் புகார் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திப் நந்தூரி  தலைமையில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.இம்முகாமில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்.         
  சோனகன்விளை நாலயிரமுடையார் குளத்தைச் சேர்ந்த விவசாயி தர்மராஜ் அவர் வழங்கிய மனுவில் கூறியதாவது...தனியார் நிதி நிறுவனத்திடம் இருந்து டிராக்டரை மீட்டுத் தராவிட்டால் ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்தோடு தற்கொலை செய்வோம் என விவசாயி ஒருவர் பரபரப்பு புகார் மனு வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட அருகே உள்ள சோனகன்விளை நாலயிரமுடையார் குளத்தைச் சேர்ந்த விவசாயி தர்மராஜ் என்பவர், அவரது குடும்பத்தினருடன் கையில் மண்ணெண்ணெய் பாட்டிலுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார். வாசலிலே போலீசார்  மண்ணெண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்தனர். அதன்  அவர் ஆட்சியரிடம் மனு அளித்தார். அதில், "நத்தகுளம் பாசனப்பகுதியில் எங்களுக்கு விவசாய நிலம் உள்ளது. விவசாயம் பாெய்த்துவிட்ட காரணத்தினால் எனது தந்தை இளைய பெருமாள் மனம் வருந்தி   வயலிலேயே விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் நான் ஸ்ரீராம் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று டிராக்டர் வாங்கி தொழில் செய்து வந்தேன். டிராக்டருக்கு மாத தவனையை சரிவர ஒழுங்காக கட்டி வந்தேன்.ஆனால் எங்கள் வீட்டுக்கு வந்து  பணம் வசூலிக்கும் அண்ணாமலை என்பவர் பணத்தை வாங்கி சென்றுவிட்டு என்னை ஏமாற்றி விட்டதால் நிதி நிறுவனத்தினர் எங்களிடம் இருந்த டிராக்டரை பறிமுதல் செய்து விட்டனர்.    
  இதனால் எங்களது வாழ்வாதரம் பறிபோய்  வாழமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டு தற்கொலை செய்யும் நிலைமைக்கு தள்ள பட்டிருக்கிறோம். ஆகையால் டிராக்டரை மீட்டுத் தர கலெக்டர்  நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo