Onetamil News Logo

கூடுதல் விலைக்கு மது விற்பனை ;தூத்துக்குடியில் டாஸ்மாக் பார் ஊழியர் குத்திக் கொலை

Onetamil News
 

கூடுதல் விலைக்கு மது விற்பனை ;தூத்துக்குடியில் டாஸ்மாக் பார் ஊழியர் குத்திக் கொலை


தூத்துக்குடி  2019 ஜூலை 20 ;தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 145 கடைகள் இயங்கி வருகின்றன.தினமும் 2 கோடி வரை மது விற்பனை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிக மது விற்பனை நடைபெறும் மாவட்டங்களில் தூத்துக்குடி மாவட்டமும் ஒன்றாகும்.
தூத்துக்குடியில் டாஸ்மாக் பார் ஊழியர் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்ததால் டாஸ்மாக் பார் ஊழியர் குத்திக் கொலை செய்யப்பட்டார். இதனால்  2பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4பேரை போலீசார் தேடி வருகின்றனர். 
தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 1-வது  தேர்வைச்  சேர்ந்தவர் மலையப்பன் இவரது மகன் குட்டி என்கிற நரசிம்மன் (41). இவர் செல்வ நாயகபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் வேலை பார்த்து வருகிறார்.
தூத்துக்குடியில் உள்ள மதுக் கடைகள் விற்பனை நேரம் முடிந்ததும் இரவில் மதுபானங்களை கூடுதல் பிளாக்கில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.அதுபோல பல முக்கிய பாரில் அரசியல் தலையீடுடன் கூடுதல் விலைக்கு மது விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு  பாரை மூடியதும், கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்துள்ளார். அப்போது அங்கு தீடீரென வந்த  6 பேர் கொண்ட கும்பல், குட்டி என்கிற நரசிம்மனிடம்  கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வது குறித்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இதில்  ஆத்திரமடைந்து  6 பேர் கும்பல் சேர்ந்து குட்டி என்கிற நரசிம்மனை பல இடங்களில்  கத்தியால் குத்தி விட்டு தப்பினர். ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிய குட்டி என்கிற நரசிம்மனை அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவகல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்தார். 
இதுகுறித்து தகவல் அறிந்து தூத்துக்குடி வடபாகம் காவல் ஆய்வாளர்  பார்த்திபன், உதவி ஆய்வாளர்  ரவிக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து  தந்தை பெரியார் நகரைச் சேர்ந்த மாடசாமி இவரது மகன் மதன் (21), மட்டக்கடையை சேர்ந்த ராஜ்குமார் இவரது மகன் மகிழன் (21), ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். சம்பவ இடத்தை டவுண் டிஎஸ்பி பிரகாஷ் பார்வையிட்டார். 
 குறைந்த விலை கொண்ட மது வகைகளுக்கு ஐந்து ரூபாய் முதல் பத்து ரூபாய் வரையிலும், அதிகப்படியான விலை கொண்ட மது வகைகளுக்கு 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை கூடுதலாக வசூலிக்கப்படுவதாகவும் மது விரும்பிகள் குற்றம் சாட்டுகின்றனர். பரபரப்பான இந்த பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக உள்ளது.
சிலர் குடித்து விட்டு ரகளையில் ஈடுபடுகின்றனர். சில நேரங்களில், அலங்கோலமாக சாலையில் விழுந்து கிடக்கின்றனர். இதனால் பெண்கள் தெருவில் நடக்கவே அஞ்சுகின்றனர். இப்போது கொலை நடந்திருப்பது, அவர்களின் பீதியை அதிகரித்துள்ளது. ஒரு குவார்ட்ர் பாட்டிலுக்கு ரூ. 5 முதல் 10 வரை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவது “குவார்ட்டருக்கு ரூ.5, ஹாஃப் மற்றும் ஃபுல்லுக்கு ரூ.10 என, ஒவ்வொரு பாட்டிலுக்கும் கூடுதல் விலை வைத்து விற்கிறோம். அதனால், முகத்துக்கு நேராக குடிமகன்கள் ஊழியர்களைத் திட்டுவது கொஞ்சநஞ்சமல்ல. ‘ரேட்டைக் கூட்டி விக்கிறியே..  நாலு வீட்ல பிச்சை எடுத்துப் பிழைக்கலாம்ல.. நீங்கள்லாம் எங்கே திருந்தப் போறீங்க.. போங்கடா போங்க..  அஞ்சு ரூபா.. பத்து ரூபான்னு உங்களுக்கு வாய்க்கரிசி போட்டுத் தொலைக்கிறோம்.” என்று அவரவர் பாணியில் தினுசு தினுசாக வசை பாடுவார்கள். முடிந்த அளவுக்குப் பொறுமை காப்போம். சிலநேரங்களில், டென்ஷனில் தலை சூடாகிவிட்டால்,விடமாட்டோம். “அஞ்சு ரூபாய்ங்கிறது பிச்சைக் காசு. என்னமோ பெரிசா லஞ்சம் கொடுத்துட்ட மாதிரி சீறுறீங்க என்று பதிலுக்கு எகிறுவோம். ஆனாலும்,  ‘நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு’ என்று உள்ளுக்குள் வெடித்து அடங்கிவிடுவோம்.என்றும் கூறுகின்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo