மாநில அளவிலான கபடி போட்டியில் முதலிடம் பெற்ற தூத்துக்குடி காவல்துறை ஆயுதப்படை ; எஸ்.பி.அருண் பாலகோபாலன் பாராட்டு
தூத்துக்குடி 2019 ஜூலை 16 ;புதியம்புத்தூரில் நடைபெற்ற மாநில அளவிலான மின்னொளி கபடி போட்டியில் முதலிடம் பெற்ற தூத்துக்குடி மாவட்ட காவல்துறை ஆயுதப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், பாராட்டி வாழ்த்தினார்.
கடந்த 13ம் தேதி மற்றும் 14ம் தேதி ஆகிய இரு நாட்கள் தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரில் மாநில அளவிலான மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது.
தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை உட்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 45 கபடி அணியினர் போட்டியில் பங்கு பெற்றனர்.
இறுதியாக தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை அணியினருக்கும், முப்பலிவெட்டி அணியினருக்கும் போட்டி நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை அணியினர் முதலிடத்தை பிடித்து பரிசுத்தொகை ரொக்கம் ரூபாய் 25,000/-மும் மற்றும் பரிசு கோப்பையும் பெற்றனர்.
வெற்றி பெற்ற தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை அணி காவலர்கள் கௌரி சங்கர், சரத்குமார், கார்த்திக், அர்ஜீன், விக்னேஷ், விஜய், குமாரசங்கர், தம்பிக்கலை, ராஜபிரபு, ராமன், ராஜசேகர், மற்றும் புஷ்பராஜ் ஆகியோரை இன்று (16.07.2019) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், பாராட்டி வாழ்த்தினார். அப்போது தூத்துக்குடி ஆயுதப்படை துணை கண்காணிப்பாளர் மாரியப்பன், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் மகேஷ் பத்மநாபன் ஆகியோர் உடனிருந்தனர்.