Onetamil News Logo

சிப்காட் காவல் ஆய்வாளர்  முத்து சுப்பிரமணியன் அதிரடியால் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு வெள்ளப்பட்டி வழியாக கடத்த இருந்த 1.25 டன் மஞ்சள் மூடைகள் பறிமுதல் 

Onetamil News
 

சிப்காட் காவல் ஆய்வாளர்  முத்து சுப்பிரமணியன் அதிரடியால் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு வெள்ளப்பட்டி வழியாக கடத்த இருந்த 1.25 டன் மஞ்சள் மூடைகள் பறிமுதல் 


தூத்துக்குடி 2020 அக்டோபர் 30 ;தூத்துக்குடி சிப்காட் காவல் ஆய்வாளர்  முத்து சுப்பிரமணியன் அதிரடியால் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு வெள்ளப்பட்டி வழியாக கடத்த இருந்த 1.25 டன் மஞ்சள் மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டது.                                                                                                                                                       
                 தூத்துக்குடியை பயன்படுத்தி அதிகளவில் கடத்தல் சம்பவங்கள் நடந்து வருவதாக ஏற்கனவே புகார் உள்ளது. இந்நிலையில், நேற்று நள்ளிரவில் சமையலுக்கான மஞ்சள் மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் வந்தது.இந்த நிலையில் இலங்கைக்கு கடத்த இருந்த 50மூடைகளில் வைத்திருந்த 1.25 டன் விரல் மஞ்சளை, தொண்டி அருகே போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக தீவிரமாக விசாரித்ததில் சிப்காட் காவல் ஆய்வாளர்  முத்து சுப்பிரமணியன், உதவி காவல் ஆய்வாளர் சங்கர், தனிப்பிரிவு உதவி காவல் ஆய்வாளர் நம்பிராஜன், தனிப்பிரிவு காவலர் கலைவானன், காவலர்கள் ஸ்டாலின், சிவஞான மாணிக்கம் ஆகியோர் தூத்துக்குடி சோரீஸ்புரத்தில் உள்ள ஒரு லாரி செட்டில் சோதனை நடத்தினர். சோதனையில் அங்கு 50 கிலோ வீதம் 24 மூட்டைகளில் 1.25 டன் விரல் மஞ்சள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  தூத்துக்குடியில் உரிய அனுமதியின்றி மஞ்சள் மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டு இலங்கைக்கு மேலும், ஈரோட்டில் இருந்து லாரியில் கொண்டுவரப்பட்ட இந்த மஞ்சள் மூட்டைகள் உரிய அனுமதியின்றி,வைத்துள்ளனர்.
50 மூடைகளில் சமையலுக்கான மஞ்சள்களை கட்டி வைத்திருந்தது தெரிந்தது. இன்று காலை வரை போலீசார் அங்கேயே பதுங்கி இருந்து, யார் இந்த மூடைகளை எடுக்க வருகிறார்கள் என்ற எதிர்பார்ப்பில் காத்திருந்தனர். ஆனால் யாரும் வரவில்லை. பின்னர் மஞ்சள் மூடைகளை கைப்பற்றி, எடுத்து வந்தனர். இலங்கைக்கு கடத்திச் செல்வதற்காக இங்கு மஞ்சள் மூடைகளை பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. கடத்தலில் ஈடுபட முயன்ற நபர்கள் குறித்த விசாரணையை போலீசார் வேகப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘பறிமுதல் செய்த மஞ்சள் மூடைகளில் இருந்த அடையாளங்களை கொண்டு, அவை எங்கிருந்து வாங்கி வரப்பட்டவை என்பது உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் விசாரணை நடத்தி வருகிறோம். குற்றவாளிகளை நெருங்கி விட்டோம்.  இலங்கையில் சமையல் மஞ்சள், கிலோ ரூ.3ஆயிரத்திற்கும் மேல் விற்கப்பட்டு வருகிறது. எனவே சமீப காலமாக மஞ்சள் கடத்தல் அதிகரித்துள்ளது. கடற்கரை பகுதியில் ஏற்கனவே போதைப்பொருள், சந்தனமரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடத்தலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைளை வேகப்படுத்தியுள்ளோம்’’ என்றனர். தூத்துக்குடி வெள்ளப்பட்டி கடற்கரை வழியாக படகு மூலம் இலங்கைக்கு கடத்த இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. லாரி செட்டில் இருந்த 1.25 டன் மஞ்சள் மூடைகளை பறிமுதல் செய்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.     
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo