Onetamil News Logo

குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் விழிப்புணர்வு நாள்

Onetamil News
 

 

குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் விழிப்புணர்வு நாள்


தூத்துக்குடி 2019 ஜூன் 12 ; தூத்துக்குடி மூன்றாவது மைல் சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளி சாரண, சாரணிய இயக்கம் சார்பில் குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் நோக்கில் கருத்தரங்கம் நடைபெற்றது.
சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழியை காலை இறைவணக்கக் கூட்டத்தில் அனைத்து மாணவ, மாணவிகளும், ஆசிரியர்களும் “இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக்குட்பட் குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன் எனவும், அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன் எனவும், குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், தமிழகத்தை குழந்தைத் தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் எனவும் உளமார உறுதி கூறுகிறேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
அதன்பின்னர் மாணவ, மாணவிகளுக்கு “டீ கிளாஸ்” என்ற குறும்படம் திரையிடப்பட்டது. இதன்மூலம் மாணவ, மாணவிகள் சிறிய வயதில் வேலைக்கு செல்வதைத் தவிர்த்து, கல்வி கற்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் இந்த சிறுகதை மாணவ, மாணவியர்களுக்கு பயனுள்ளதாய் அமைந்தது. சாரண, சாரணிய பொறுப்பாசிரியர்கள் அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நிறைவில் சாரண, சாரணியர்களிடம் உங்கள் வீட்டிற்கு அருகிலோ, அல்லது உறவினர்களோ 14 வயதுக்குட்பட்ட ஏழை மாணவ, மாணவிகளாக இருந்தால் அவர்களை அழைத்து வாருங்கள் நாம் இலவசமாக கல்வி கற்றுக் கொடுப்போம் என்று பள்ளியின் நிறுவனர் சு.சண்முகம் உறுதி அளித்தார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo