Onetamil News Logo

தோல்வியில் முடிந்தது ; தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை

Onetamil News
 

தோல்வியில் முடிந்தது ; தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை 



கோவில்பட்டி பிப் 12:  
கோவில்பட்டியில் தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கப்படாமல் இருக்கும் தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு சட்டப்படியான கூலி உயர்வு வழங்க வேண்டும், தொழிலாளர் நலச்சட்டத்தில் உள்ளபடி தொழிலாளர்களுக்கு குடிநீர் வசதி, கழிப்பிட வசதி மற்றும் பஞ்சப்படி, பி.எப். இ.எஸ்.ஐ. உள்ளிட்ட வசதிகளை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 12 தினங்களுக்கு மேலாக கோவில்பட்டியில் தீப்பெட்டி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் அனிதா தலைமையில் தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் தொழிலாளர் நல அலுவலர்கள், தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள், தீப்பெட்டி தொழிலாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தீப்பெட்டி தொழிலாளர்கள் குறைந்தபட்ச கூலி உயர்வினையாவது தர வேண்டும் என்று வலியுறுத்தினர்.ஏற்கனவே 20 சதவீதம் உயர்த்தப்பட்ட கூலியை தொழிலாளர்கள் ஏற்காத நிலையில், மீண்டும் தொழிலாளர்கள் கேட்கும் கூலி உயர்வினை செயல்படுத்துவது தொடர்பாக வரும் 14ந்தேதி உற்பத்தியாளர்களுடன் பேசி, 15ந்தேதி கூலி உயர்வு குறித்து தெரிவிப்பதாக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தை தொடர்ந்து, எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை, வரும் 16ந்தேதி மீண்டும் கூலி உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அனைத்து தரப்பினரும் தெரிவித்துள்ளனர். அதுவரை தாங்கள் வேலைக்கு செல்ல போவதில்லை என்றும் தங்களுடைய போராட்டம் தொடரும் என்று தீப்பெட்டி தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.பேச்சு வார்த்தையில் தாசில்தார் ஜான்சன் தேவசகாயம், தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநர் தமிழ்;செல்வன், உதவி இயக்குநர் சுடலைசெல்வம், முத்திரை ஆய்வாளர் காத்திகேயன், நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பரமசிவம், செயலாளர் சேதுரத்தினம்,தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சுரேஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் அழகுமுத்துபாண்டியன் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo