Onetamil News Logo

தூத்துக்குடி மாவட்டத்தில் கடன் வழங்குவதற்காக சிறப்பு முகாம்கள் வரும் 23ம் தேதி,25ம் தேதி ,30ம் தேதி 

Onetamil News
 

தூத்துக்குடி மாவட்டத்தில் கடன் வழங்குவதற்காக சிறப்பு முகாம்கள் வரும் 23ம் தேதி,25ம் தேதி ,30ம் தேதி 


தூத்துக்குடி  2019 ஜூலை 16 ; தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மக்களுக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள் 23.07.2019, 25.07.2019, 30.07.2019 ஆகிய நாட்களில் நடைபெறுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தகவல்  தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது .......
தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்  சார்பில் பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர், சிறுபான்மையினருக்கு கடனுதவி வழங்கி வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மக்களுக்கான கல்விக் கடன், தனிநபர் கடன், சுய உதவிக்குழுக்கான கடன், கறவைமாடு கடன், ஆட்டோ கடன் ஆகியவை வழங்கும் சிறப்பு முகாம்கள் கீழ்க்கண்ட விபரப்படியான இடங்களில் நடத்தப்பட உள்ளது. இந்த வாய்ப்பினை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் இன மக்கள் பயன்படுத்தி பொளாதார மேம்பாடு அடைந்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கடன்தொகை பெற ஆதார் அட்டை, சாதிச்சான்று பள்ளி மாற்றுச் சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், கல்வி கட்டணம் செலுத்திய ரசீது, மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றின் நகல் மற்றும் வங்கி கோரும் இதர ஆவணங்களுடன் நேரில் கலந்துகொள்ளலாம். 
      தூத்துக்குடி மாவட்டத்தில் கடன் வழங்குவதற்காக சிறப்பு முகாம்கள், 23.07.2019 (செவ்வாய்) அன்று மு.ப.10.00 முதல் பி.ப.5.00 மணி வரை தூத்துக்குடி - மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கி லிட்., 109/5டீ, எட்டயபுரம் ரோடு, போல்பேட்டை, தூத்துக்குடி என்ற முகவரியிலும், 25.07.2019(வியாழன்) அன்று மு.ப.10.00 முதல் பி.ப.5.00 மணி வரை திருச்செந்தூர் கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, பேருந்து நிலையம் அருகில் திருச்செந்தூர் என்ற முகவரியிலும், 30.07.2019 (செவ்வாய்) அன்று மு.ப.10.00 முதல் பி.ப.5.00 மணி வரை கோவில்பட்டி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி லிட்., கோவில்பட்டி கிளை வளாகம் (நகராட்சி அலுவலகம் அருகில்) கோவில்பட்டி என்ற முகவரியிலும் நடைபெறுகிறது. இந்த கடன் வழங்கும் சிறப்பு முகாமில் சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மக்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,  தெரிவித்துள்ளார். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo