Onetamil News Logo

2018-19ம் ஆண்டிற்கான தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கம் வென்றவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல்

Onetamil News
 

2018-19ம் ஆண்டிற்கான தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கம் வென்றவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல்


தூத்துக்குடி 2020 மே 21 ;தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கம் வென்றவர்களுக்கு 2018-19ம் ஆண்டிற்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கிட பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அவர்களது விளையாட்டு சான்றிதழ் மற்றும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையின் நகல்களை இம்மாத இறுதிக்குள் அலுவலக நேரத்தில் நேரில் வந்து சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொள்கின்றனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் 2018-19ம் ஆண்டு தேசிய அளவிலான போட்டிகளில் (இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டுக் குழுமம் நடத்திய போட்டிகள் தவிர்த்து) கலந்து கொண்டு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்கிட தொகை வழங்கப்படவுள்ளது. அவை முறையே தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.6000-மும், வெள்ளிப்பதக்கம் வென்றவர்களுக்கு ரூ..4000-மும், வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ..2000-மும் வழங்கப்படவுள்ளது. எனவே 2018-19ம் ஆண்டு தேசிய அளவிலான போட்டிகளில், அதாவது 01.04.2018 லிருந்து 31.03.2019 வரையிலான காலத்தில் கலந்து கொண்டு பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அவர்களது விளையாட்டு சான்றிதழ் மற்றும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையின் நகல்களை இம்மாத இறுதிக்குள் கீழ்க்கண்ட இவ்வலுவலக முகவரிக்கு அலுவலக நேரத்தில் நேரில் வந்து சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. 
மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர்,
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்,
தூத்துக்குடி மாவட்டப் பிரிவு,
மாவட்ட விளையாட்டரங்கம்,
ஜார்ஜ் ரோடு, தூத்துக்குடி - 628 001,
தொலைபேசி எண். 0461 2321149
மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர்,தூத்துக்குடி 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo