Onetamil News Logo

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டியில் ஸ்மார்ட்டான லைட்டுகள்!

Onetamil News
 

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டியில் ஸ்மார்ட்டான லைட்டுகள்!


தூத்துக்குடி 2018 ஜூலை 10 ; தூத்துக்குடி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டியில் ஸ்மார்ட்டான லைட்டுகள் பொருத்தப்படும் என்று  மாநகராட்சி ஆணையர் (ம) தனி அலுவலர்  டாக்டர்.ஆல்பி ஜான் வர்க்கீஸ், செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
   
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது..தூத்துக்குடி  மாநகராட்சியானது, மத்திய அரசால் """"ஸ்மார்ட் சிட்டி"" என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாநகரின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்காக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இதன் தொடர்ச்சியாக மின் ஆற்றல் சிக்கன நடவடிக்கையாக மாநகரின் எல்கையான எட்டையபுரம் சாலை முதல் புதிய பேருந்து நிலையம் வரை மற்றும் மாநகரின் மையப் பகுதியான பாளையங்கோட்டை ரோடு வி.வி.டி. சிக்னல் முதல் 3வது மைல் பாலம் விரையிலான பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்  ரூ. 175.00 இலட்சம் மதிப்பீட்டில் எல்.இ.டி. லைட்டுகள் புதிதாக அமைப்பதற்கு ஸ்மார்ட் சிட்டி நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.  எனவே மேற்படி பணிகள் விரைவில் துவங்கப்பட்டு மாநகரின் பிரதான பகுதிகள் ஒளிரும் வகையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படுமென மாநகராட்சி ஆணையர் (ம) தனி அலுவலர்  டாக்டர்.ஆல்பி ஜான் வர்க்கீஸ், தெரிவித்தார். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo