Onetamil News Logo

தூத்துக்குடியில் கீதாஜீவன் எம்எல்ஏ தலைமையில் நாளை வடக்கு மாவட்ட  திமுக ஆலோசனை கூட்டம் 

Onetamil News
 

தூத்துக்குடியில் கீதாஜீவன் எம்எல்ஏ தலைமையில் நாளை வடக்கு மாவட்ட  திமுக ஆலோசனை கூட்டம்  



தூத்துக்குடி 2018 நவம்பர் 8 ; தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி நிலவரம் குறித்து திமுக சார்பில் ஆலோசனை கூட்டம் நாளை (9ம்தேதி) காலை கலைஞர் அரங்கில் நடக்கிறது. 
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி திமுக ஆலோசனை கூட்டம்  இன்றும் நாளையும் நடப்பதாக  வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது... தமிழகத்தில்  உள்ள பாராளுமன்ற தொகுதிகளுக்கு திமுக தலைமை சார்பில் தேர்தல் பொறுப்பாளர்கள்  நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் அடிப்படையில்  தூத்துக்குடி பாராளுமன்ற  தொகுதிக்கு  தேர்தல்  பொறுப்பாளர்களாக தங்கபாண்டியன் எம்எல்ஏ, வக்கீல் மனுராஜ் சுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சட்டமன்ற தொகுதி வாரியாக ஆலோசனை நடக்கிறது. இதன்படி இன்று காலை 10 மணிக்கு கோவில்பட்டி  சத்யபாமா திருமண மண்டபத்திலும்,இன்று மாலை 4 மணிக்கு விளாத்திகுளம் எஸ்விஎம்ஆர் கஸ்தூரி மஹாலிலும் நடக்கிறது. 
9ம் தேதி நாளை காலை 10 மணிக்கு தூத்துக்குடி  கலைஞர் அரங்கில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில் அந்தந்த  தொகுதிகளுக்கு உட்பட்ட மாவட்ட, மாநகர, நகர, கிளை, பேரூர், ஒன்றிய  நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், அணிகளின்  அமைப்பாளர்கள், சார்பு அணியினர் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo