Onetamil News Logo

பி.எம் கிசான் - பிரதம மந்திரி விவசாயிகள் வெகுமதி நிதித் திட்டம் பயனாளிகளை சேர்க்க சிறப்பு முகாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தகவல் தெரிவித்துள்ளார்.

Onetamil News
 

பி.எம் கிசான் - பிரதம மந்திரி விவசாயிகள் வெகுமதி நிதித் திட்டம் பயனாளிகளை சேர்க்க சிறப்பு முகாம்  - மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தகவல் தெரிவித்துள்ளார்.


தூத்துக்குடி 2019 ஜூன்  பி.எம் கிசான் எனப்படும் பிரதம மந்திரியின் விவசாயிகள் வெகுமதி நிதித் திட்டத்தின் கீழ்  சிறு/குறு நில உடைமை விவசாயிகள் பதிவு செய்யப்பட்டு வெகுமதி நிதி வழங்கப்பட்டு வருகிறது.
 தற்போது இத்திட்டத்தின் பயனை பெரிய விவசாயிகளுக்கும் கிடைக்கும் வகையில் விரிவு படுத்தப்பட்டுள்ளது. எனவே திட்டத்தின்படி உள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு பெரு விவசாயிகளையும் கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்படட்டு வருகிறது. எனவே தகுதியான  பெரு விவசாயிகள் நில உடைமைப் பட்டா எண், ஆதார் அட்டை எண், வங்கிக் கணக்குப் புத்தக முதற்பக்க நகல் விவரங்கள் (வங்கியின் பெயர், கிளை, கணக்கு எண், ஐ.எப்.எஸ்.சி கோடு) குடும்ப அட்டை எண், தங்கள் அலைபேசி எண் ஆகிய விவரங்களை ஒரு வெள்ளைத் தாளில் எழுதிக் கையொப்பமிட்டு, கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களில் வழங்கிடக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இதுவரை பதிவு செய்யாத சிறுஃகுறு விவசாயிகளும் இப்போது பதிவு செய்துகொள்ளலாம்.
 பி.எம் கிசான் திட்டத்தின்படி பயனாளிகளின் பெயர் 1.2.2019 தேதியில் நில ஆவணங்களில் இடம் பெற்றிருக்க வேண்டும். இந்த நிபந்தனை மாற்றியமைக்கப்பட்டு 1.2.2019க்கு முன்பு பட்டாதாரர் இறந்து வாரிசு அடிப்படையில் பட்டா மாற்றம் நிகழாத இனங்களில் தற்போது வாரிசு அடிப்படையில் பட்டா மாற்றம் செய்து நில ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்யப்பட்ட பின்பு அவர்களையும் பயனாளிகளாக சேர்க்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.. எனவே இம்மாதிரியான நேர்வுகளில் உடனடியாக வாரிசு அடிப்படையில்; பட்டா மாற்றம் செய்திட மனு செய்து பட்டாவில் பெயர் மாற்றம் மேற்கொள்ளப்பட்ட பின்னர் இத்திட்டத்தின்கீழ் பயனாளிகளாக சேர்ந்து கொள்ளலாம். எனவே வாரிசு அடிப்படையில் பட்டா மாற்றம் செய்யாமல் இருக்கும் விவசாயிகள் உடனடியாக பட்டா மாற்றம் செய்திட மனு செய்து இத்திட்டத்தின் பயனாளியாக சேர்ந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இத்திட்;டத்தின் கீழ் பயனாளிகளை சேர்க்க 21.6.2019 மற்றும் 22.6.2019 ஆகிய தினங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து கிராம நிர்வாக அலுவலகங்களிலும் மனுக்கள் பெற சிறப்பு முகாம் நடை பெற உள்ளது. எனவே இத்திட்டத்தின் கீழ் இது வரை பதிவு செய்யாத விவசாயிகள் சிறப்பு முகாமில் தங்களது விவரங்களை அளித்து இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெற  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கேட்டுக் கொள்கிறார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo