Onetamil News Logo

வ.உ.சி.துறைமுகத்தை கொழும்பு துறைமுகம் போல் சர்வதேச சரக்குப் பெட்டகப் பரிமாற்றும் மையமாக மாற்றிட விரைவில் நடவடிக்கை

Onetamil News
 

வ.உ.சி.துறைமுகத்தை கொழும்பு துறைமுகம் போல் சர்வதேச சரக்குப் பெட்டகப் பரிமாற்றும் மையமாக மாற்றிட விரைவில் நடவடிக்கை 


 தூத்துக்குடி 2019 ஆகஸ்ட் 24 ;தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகத்தை கொழும்பு துறைமுகம் போல் சர்வதேச சரக்குப் பெட்டகப் பரிமாற்ற  மையமாக (International Container Transit Hub) மாற்றிட விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய கப்பல் துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு), உரம் மற்றும் ரசாயனத் துறை இணையமைச்சர் மன்சுக் எல்.மண்டாவியா தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் கூறினார்.
தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகத்தை கொழும்பு துறைமுகம் போல் சர்வதேச சரக்குப் பெட்டகப் பரிமாற்ற  மையமாக (International Container Transit Hub) மாற்றிட  நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய கப்பல் துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு), உரம் மற்றும் ரசாயனத் துறை இணையமைச்சர் மன்சுக் எல்.மண்டாவியா கூறினார்.
இன்று தூத்துக்குடிக்கு வந்திருந்த  மத்திய  இணை அமைச்சர் மான்சுக் மாண்ட்வியா  தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள  சூரிய சக்தி மின்சாரம் அமைப்பதற்கான அடிக்கல்லை நாட்டினார் பின்னர் வ.உ.சிதம்பரனார் துறைமுகதில் வெளித்துறைமுக பணிகளை  இழுவை கப்பலில் சென்று ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி வ. உ. சிதம்பரனார் துறைமுகத்தில் கப்பல்கள் உள்ளே வரும் நுழைவாயிலை 230 மீட்டராக அகலப்படுத்தும் பணி 13 கோடியே 11 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது,  இந்த திட்டத்தை இன்று ஆய்வு செய்து அதனை பார்வையிட்ட அவர், அந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். நிலக்கரி இறக்குமதி தளம், வடக்கு சரக்கு தளம் மூன்று, 58 கோடி 30 லட்சம் ரூபாய்  மதிப்பீட்டில் மார்ஷலிங் யார்டில் இருந்து துறைமுக பரிமாற்ற முனையத்திற்கும் இடையே ரயில் பாதை அமைக்கும் பணி உட்பட 139 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்:-
வ.ஊ.சிதம்பரனார் துறைமுகத்தில் இன்று 193 கோடிக்கான உள்கட்டமைப்பு வசதிகள் செய்து முடிக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன ஆண்டுக்கு 2.5 மில்லியன் (25 லட்சம் TEUS) Twenty equalant units) அளவிற்க்கு , சரக்கு பெட்டக போக்கு வரத்து கொழும்பு துறைமுகத்தில் நடைபெறுகிறது, (transshipment ) இதனை தூத்துக்குடி துறைமுகத்தின் மூலமாக கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த துறைமுகத்ததை பொறுத்த வரை வேறு எங்கும் இல்லாத வகையில் 900 ஏக்கர் நிலம் உள்ளது. வளர்ச்சிக்கான அதிக ஆற்றல் (potential) உள்ளது.  அந்த இடத்தில் கச்சசா எண்ணெய் சுத்திகரிப்பு (oil refinery) உள்ளிட்ட ஆலைகள் அமைத்தால் அதை சுற்றி சிறு மற்றும்  குறு ஆலைகள் அதனை சார்ந்து வளரும். இதன் மூலம் எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு பெருகும். இது அனைத்தும் ஒரு நாளில் முடிந்து விடும் காரியம் அல்ல. அதற்க்காக ஒரு திட்ட அறிக்கை (master plan) தயார் செய்யப்பட்டுள்ளது.
துறைமுகத்தில் பெரிய கப்பல்கள் வருவதற்காக பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி துறைமுகத்தை ஆழப்படுத்தும் பணி உள்ளிட்ட  மூன்றாயிரம் கோடி ரூபாய் செலவில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் முடிவடையும்.
நாட்டிலுள்ள துறைமுகங்களை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு கொண்டுவந்த சாகர்மாலா திட்டத்தில் 200 திட்டங்கள் செயல்படுத்த திட்டமிடப்பட்டதில் 123 திட்டப்பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
முன்னதாக துறைமுகத்தின் சார்பில் சமுதாய வளர்ச்சி CSR திட்டத்தின் மூலம் தூத்துக்குடி திரேஸ்புரத்தில் கட்டப்பட்டுள்ள மீன் ஏலக்கொட்டகையை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி வ. உ. சிதம்பரனார் துறைமுக பொறுப்பு கழக தலைவர் டி.கே.ராமசந்திரன், துணைதலைவர் வையாபுரி, முன்னாள் மத்திய இனை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அமைச்சர் கூறியது போல தூத்துக்குடியை சர்வதேச சரக்குப் பெட்டகப் பரிமாற்ற  மையமாக மாற்றுவது சாத்தியமா ?
தூத்துக்குடி துறைமுகத்தில் கையாளப்படும் சரக்குகளில், 70 சதவிகிதம் கொழும்பு, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளின் துறைமுகங்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டு பின்னர்,  சர்வதேச நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதற்க்குக் காரணம் பெரிய கப்பல்கள் வருவதற்க்கான மிதவை ஆழம் அப்போது இல்லை, ஆனால் கடந்த வருடம் துறைமுகத்தின் மிதவை ஆழம் 14 மீட்டர் அதிகரித்த  பின்னர், பெரிய கப்பல்கள் வர ஆரம்பித்தனர் இதன் வருகையால், 30 சதவிகித சரக்கு பரிமாற்றம் நேரடியாக தற்போது   நடைபெறுகிறது. ஆனால் அவைகளில் பெரும்பாலானவை மொத்த சரக்குகள் (BULK CARGO), சரக்கு பெட்டக கப்பல்கள் தற்சமயம் நேரடி சேவையை தொடங்கியிருந்தாலும் , கொழும்பு , சிங்கப்பூர் துறைமுகங்கள் போல் சர்வதேச டிரான்ஸிட் ஹப் ஆக தூத்துக்குடி மாறுவதற்க்கு வாய்ப்பே இல்லை என்கின்றனர் வல்லுநர்கள் காரணம் தூத்துக்குடியின் பூகோள அமைப்பு அப்படி.
சென்னையிலிருந்து கிளம்பும் கப்பல் தூத்துக்குடி வர வேண்டுமெனில் இலங்கையை சுற்றியே வர வேண்டும், இந்தியாவின் மேற்கிலிருந்து, கிழ‌க்கு (உதாரணம் -மும்பையிலிருந்து கல்கத்தாவிற்கு) ம‌ற்றும் கிழ‌க்கிலிருந்து மேற்கு (உதாரணம் -க‌ல்க‌த்தாவிலிருந்து – மும்பைக்கு) ந‌டைபெறும் க‌ட‌ல் வ‌ழி வர்த்தகம் கொழும்பு மூல‌மாக‌வே ந‌டைபெற்று வ‌ருகின்ற‌து. இந்நிலை மாறி இனி இந்த‌ க‌ட‌ல்வ‌ழி வர்த்தக‌‌ம் தூத்துக்குடி துறைமுக‌ம் மூல‌மாக‌ ந‌டைபெற வேண்டுமெனில் அதற்க்கு முதலில் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
அத‌ற்காக‌ தூத்துக்குடி துறைமுக‌த்தில் ஒரு இடைநிற் மையம் (Trans-shipment Hub) ஒன்றை உருவாக்க‌ வேண்டும். அவ்வாறான‌ ஒரு புதிய‌ இடைநிற் மையம் உருவாக்க‌வில்லையெனில் “சேது ச‌முத்திர‌ திட்ட‌ம்” எவ்வித வர்த்தக ப‌ய‌னையும் தூத்துகுடி துறைமுகத்திற்கு த‌ராது. 2004லிருந்து தூத்துக்குடி துறைமுகத்தில் ஒரு புதிய‌ இடைநிற் மையம் (Trans-shipment Hub) உருவாக்க‌வேண்டும் அப்படி திட்டங்களை தீட்டினாலும் தூத்துக்குடி துறைமுக‌ம் பெரிய வ‌ள‌ர்ச்சிய‌டையாது என்பதே உண்மை.
அதே நேர‌த்தில் இல‌ங்கையை க‌வ‌னியுங்க‌ள் ஏற்க‌ன‌வே கொழும்பு துறைமுக‌ம் 5 மில்லிய‌ன் சரக்கு பெட்டகங்க‌ளை (Container)கையாளும் வ‌கையில் இருக்கும் பொழுது அவ‌ர்க‌ள் அடுத்து ஹ‌ம்ப‌ன்தோட்டாவில் 20 மில்லிய‌ன் சரக்கு பெட்டகங்க‌ளை(Container) கையாளும் வ‌கையில் க‌ட்டி முடிக்கும் நிலையில் உள்ள‌து துறைமுக‌ம். அப்ப‌டியே இந்தியாவில் க‌ட்ட‌ப்ப‌டும் துறைமுக‌ங்க‌ளையும், அவ‌ற்றின் சரக்கு பெட்டகங்க‌ளை கையாளும் திற‌னையும் பாருங்க‌ள். இந்தியாவின் தெளிவற்ற கடற்வர்த்தம் விளங்கும்.
மேலும் சேது கால்வாய் திட்டம் செயல்படுத்தப்பட்டாலும் அவற்றில்  அதிக‌ப‌ட்ச‌மாக 30,000 DWT (Dead Weight in Tons- ) எடை கொண்ட கப்பல்கள் மட்டுமே இதன் வழியாக செல்ல முடியும். க‌ட‌ல் வ‌ழி போக்குவ‌ர‌த்து செல‌வை குறைக்க‌ எல்லா க‌ப்ப‌ல், க‌ட‌ல் வ‌ழி வ‌ர்த்த‌க‌ நிறுவ‌ன‌ங்க‌ளும் செலவை குறைக்க பெரிய‌ க‌ப்ப‌ல்க‌ளையே ப‌ய‌ன்ப‌டுத்துகின்ற‌ன‌. 30,000 DWT அதிக‌மான‌ எடை கொண்ட‌ க‌ப்ப‌ல்க‌ளில் வ‌ர்த்த‌க‌ம் ந‌டைபெறும் பொழுது அவை முழுதும் கொழும்பு துறைமுக‌ம் வ‌ழியாக‌வே ந‌டைபெறும்.
இதுவரை இந்தியாவின் கிழக்கு பகுதி(சென்னை, விசாகப்பட்டினம், கொல்கத்தா), வங்க தேசம் உள்ளிட்ட நாடுகளுக்கான ப‌ன்னாட்டு க‌ட‌ல் வ‌ழி வ‌ர்த்த‌க‌ம் கொழும்பு மூல‌ம் ந‌டைபெற்ற‌து, சேது சமுத்திர திட்டம் வந்தால் இது மாறுமா?
முதலில் பன்னாட்டு கடல் வர்த்தகம் பற்றி பார்ப்போம். அத‌ற்கு முன்னால் சில‌ வார்த்தைக‌ளை ப‌ற்றிய அறிமுகத்தையும், அதற்கான விள‌க்க‌த்தை தெரிந்து கொள்ள‌ வேண்டியது அவ‌சிய‌ம்.
சிறிய கப்பல் (Feeder Vessal ) – அதிக‌ப‌ட்ச‌ம் ஆயிரம் சரக்கு பெட்டகங்க‌ளை (container) எடுத்துச் செல்லும் கப்பல். இந்த‌ க‌ப்ப‌ல்க‌ள் இடைநிற் மையம் (Transit Point) என்ற‌ குறிப்பிட்ட‌ இட‌ம் வ‌ரை ம‌ட்டுமே செல்லும்.
பெரிய கப்பல் (Mother Vessal) – ஆயிரத்திற்கும் அதிகமான‌ சரக்கு பெட்டகங்க‌ளை (container) எடுத்துச் செல்லும் கப்பல். இந்த கப்பல்கள் இடைநிற் மையத்திலிருந்து (Transit Point) பொருட்கள் செல்ல வேண்டிய துறைமுகம் வரை செல்பவவை.
இடைநிற் மையம் (Trans-shipment Hub) – தொடக்க துறைமுகத்திலிருந்து கிளம்பி வரும் சிறிய கப்பல்க‌ள் இங்கு நிறுத்த‌ப்ப‌ட்டு அந்த‌ க‌ப்ப‌ல்க‌ளிலுள்ள‌ சரக்கு பெட்டகங்க‌ள் அங்குள்ள துறைமுகத்தில் இற‌க்க‌ப்ப‌ட்டு பெரிய க‌ப்ப‌ல்க‌ளுக்கு மாற்ற‌ப்ப‌டும். மேற்கூறிய‌ நாடுகளுக்கான பன்னாட்டு கடல் வழியில் மொத்தம் இரண்டு இடைநிற் மையங்க‌ள் உள்ள‌ன‌. ஒன்று சிங்க‌ப்பூர், ம‌ற்றொன்று கொழும்பு. சிங்க‌ப்பூர் அமெரிக்கா செல்லும் பொருட்க‌ளுக்கும், கொழும்பு ஐரோப்பிய நாடுக‌ளுக்கு செல்லும் பொருட்க‌ளுக்கான‌ இடைநிற் மையங்க‌ளாக‌வும் உள்ள‌து.
இந்தியா, இலங்கை,வ‌ங்க‌ தேச‌ம், சீனா, ஜ‌ப்பான்,சிங்கப்பூர், இந்தோனேசியா உள்ளிட்ட‌ நாடுகளிலிருந்து அமெரிக்கா செல்லும் பொருட்கள் பெரும்பான்மையாக அந்த நாடுகளிலுள்ள துறைமுகத்திலிருந்து சிறிய கப்பல்க‌ள் மூலமாக கிளம்பி சிங்கப்பூர் வரை செல்கின்றன. சிங்கப்பூரில் உள்ள துறைமுகத்தில் இந்த சரக்கு பெட்டகங்கள் இறக்கப்பட்டு அங்கிருந்து பெரிய க‌ப்ப‌ல்க‌ளுக்கு மாற்ற‌ப்ப‌டும். இந்த கப்பல்கள் அமெரிக்காவில் தாங்கள் சென்று சேர வேண்டிய துறைமுகம் வரை செல்லும்.
இதுவே ஐரோப்பிய‌ நாடுகளுக்கு செல்லும் பொருட்கள் பெரும்பான்மையாக கொழும்பு துறைமுகம் வரை வந்து அங்கிருந்து பெரிய க‌ப்ப‌ல்க‌ளுக்கு மாற்ற‌ப்பட்டு தங்கள் இலக்கிற்கான துறைமுகம் வரை செல்லும்.*
இதில் இந்தியாவில் உள்ள‌ மும்பை துறைமுக‌ம் போன்ற‌ பன்னாட்டு துறைமுக‌ங்க‌ளுக்கு வில‌க்கு இந்த‌ பன்னாட்டு துறைமுக‌ங்க‌ளுக்கு பெரிய க‌ப்ப‌ல்க‌ளே வ‌ந்து செல்லும். ச‌ரி ஒரு துறைமுக‌ம் பன்னாட்டு துறைமுக‌மாக‌ மாற‌ என்ன‌ வேண்டும்? ஒன்று பெரிய க‌ப்ப‌ல்க‌ள் வ‌ரும‌ள‌விற்கு க‌டலின் த‌ரைத்த‌ள‌ம் ஆழ‌மாக‌ இருக்க‌ வேண்டும் (15 மீட்டருக்கு மேல்). இன்னொன்று அதிக‌ள‌வு சரக்கு பெட்டகங்கள் அந்த‌ துறைமுக‌த்திற்கு வ‌ர‌ வேண்டும்.
இந்தியாவில் மேற்கு பகுதியில் மும்பை த‌விர்த்து கிழ‌க்கிலும், தெற்கிலும் எந்த‌ ஒரு பன்னாட்டு துறைமுக‌மும் இல்லாத‌தால் இந்த‌ ப‌குதிக‌ளில் உள்ள‌ துறைமுக‌ங்க‌ளிலுருந்து சிறிய‌ க‌ப்ப‌ல்க‌ள் ம‌ட்டுமே வ‌ந்து செல்கின்ற‌ன‌. சென்னையிலும், கொச்சினில் புதிதாக‌ க‌ட்ட‌ப்ப‌ட்டுள்ள‌ வள்ளார்படம் துறைமுக‌த்திலும் ஒரு பெரிய கப்பல் ம‌ட்டுமே வ‌ந்து போகின்ற‌து.சேது கால்வாய் பணி முடிந்தாலும், தூத்துக்குடி துறைமுகத்தை எவ்வளவு ஆழப்படுத்தினாலும் மேற்சொன்ன‌வையே ந‌ட‌க்கும். அதாவது பன்னாட்டு கடல் வர்த்தகம் கொழும்பு, சிங்கப்பூர் மூலமாகவே நிகழும். ஒரே ஒரு மாற்ற‌ம் ம‌ட்டுமே இதில் உண்டு, சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட தென் கிழக்கு, கிழ‌க்கு க‌ட‌ற்க‌ரைக‌ளிலிருந்தும், வ‌ங்க‌தேச‌ க‌ட‌ற்க‌ரையிலிருந்தும் கிள‌ம்பும் க‌ப்ப‌ல்கள் இல‌ங்கையின் கிழ‌க்கு ப‌குதியை சுற்றி கொழும்பு செல்லாம‌ல் தூத்துக்குடி க‌ட‌ல் வ‌ழியாக‌ கொழும்பு செல்லும், இதனால் பயண‌ தூரம் குறையும்.எப்படி போனாலும் இலங்கையை தொடாமல் செல்ல முடியாது  இப்படி இலங்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அமைந்திருக்கின்றது. கப்பல் போக்குவரத்தை  எடுத்துக் கொண்டால் சிறந்த முறையில் இணைக்கப்பட்ட நாடு என்ற நிலையை இலங்கை தெற்காசியாவில் பெற்றுள்ளது. இந்தியாவையும் மிஞ்சி, ஐக்கிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் அபிவிருத்தி மாநாடு (UNCTAD) வெளியிட்ட ‘Liner Shipping Connectivity Index 2018’ எனும் சஞ்சிகையில் உலகில் 16ஆவது இடத்தைப் பிடித்திருக்கின்றது. இந்தியா 37 ஆவது இடத்தில் இருக்கின்றது,இந்தியாவில் இத்தனை துறைமுகங்கள் இருந்தும் இலங்கை ஒரே துறைமுகத்தை வைத்து முந்திச் செல்வது அதன் பூகோள முக்கியத்துவம் கருதிதான், இந்தியாவின் பல துறைமுகங்களில் ஏற்றப்படும் சரக்கு பெட்டகங்கள் இலங்கைக்கு சென்றே பரிமாற்றம் செய்யப் படுகின்றன அவைகள் கூட தூத்துக்குடி துறைமுகம் வருவதற்க்கு வாய்ப்பில்லாத போது பல நாடுகளில் இருந்து வரும் சரக்கு பெட்டகங்கள் தூத்துக்குடிக்கு எப்படி வரும்? அப்படியே வந்தாலும் அவைகள் சென்னை, விசாகப்பட்டினம், மும்பை, கல்கத்தா ஆகிய இந்திய துறைமுகங்களுக்கு Feeder Vesel மூலம் கொண்டு செல்ல இலங்கையை சுற்றியே செல்ல வேண்டும், அது அதிக நேர விரயத்தோடு பொருட்செலவும் அதிகம் பிடிக்கும் யார் விரும்புவார்கள் இதை
ஆகவே தூத்துக்குடி எப்போதும் போல ஒரளவு வளர்ச்சி பெற்று துறைமுகமாக இருக்குமே தவிர ஒரு காலத்திலும் சர்வதேச சரக்கு பெட்டக முனையமாக மாறுவதற்க்கான சாத்தியமே இல்லை என்பது  வல்லுனர்களின் கருத்து என்று கூறியுள்ளார்.இந்த விழாவில் துறைமுகசபை தலைவர் இராமசந்திரன்,மக்கள் தொடர்பு அலுவலர் சசிராஜ், உட்பட பல அதிகாரிகள் பங்கேற்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo