Onetamil News Logo

கமலஹாசன் 64 வது பிறந்தநாள் கொண்டாட்டம் ; அடுத்த முதல்வர் கமலஹாசன் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் சேகர் திருச்செந்தூரில் பரபரப்பு பேட்டி 

Onetamil News
 

கமலஹாசன் 64 வது பிறந்தநாள் கொண்டாட்டம் ; அடுத்த முதல்வர் கமலஹாசன் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் சேகர் திருச்செந்தூரில் பரபரப்பு பேட்டி   


தூத்துக்குடி 2018 நவம்பர் 7 : கமலஹாசன் 64 வது பிறந்தநாள் கொண்டாட்டம் ; தூத்துக்குடியில் மாவட்ட பொறுப்பாளர் சேகர் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.                                                           
                                                                                                              
தூத்துக்குடியில் மாவட்ட பொறுப்பாளர் சேகர் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விழாவிற்கு  ஆர்.ஜவஹர் முன்னிலை வகித்தார்.                                                                                                          
விழாவில் அலெக்ஸ் ,ரத்தினராஜா,நடராஜன்,அக்பர் ,சிவகுமார், பாலா, வக்கீல் ரமேஷ், ரெங்கநாதன், மணிகனுடன், முகம்மது, பிரகாஷ்,மங்கள்ராஜ், உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டார்.                                                                                                              
தூத்துக்குடியில் சத்தியா நகர் பகுதியில் ஏழை மக்களுடன் கமலஹாசன் 64 வது பிறந்தநாள் விழாவை கொண்டாடி லட்டு வழங்கினார்கள்,  லூர்தம்மாள்புரம் பகுதியில் உள்ள ஏழை மக்களுக்கு அரிசி வழங்கப்ட்டது. தொழுநோய் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கும்,எட்டயாபுரம் சாலையில் உள்ள ஜான் ஜீகன் முதியோர் இல்லத்தில்உள்ள முதியோருக்கும்  நண்பகல் உணவு வழங்கினார்கள், பின்னர் அரசு மருத்துவக் கல்லூரியில் இரத்ததானம் செய்தார்கள்.பின்னர் பண்டாரவிளையில் மக்கள் நீதி மய்யம் கட்சி கொடியை தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் சேகர் தலைமை தாங்கி கொடியேற்றி வைத்தார்.மாலையில் திருச்செந்தூர் பேருந்து நிலையம் முன்பு வெடி போட்டு அங்குள்ள மக்களுக்கு லட்டு வழங்கினார்கள். அடைக்கலாபுரத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் மானவர்களுக்கு மாலை டிபன் வழங்கப்பட்டது. பின்னர் மணப்பாடு சென்று கட்சி மக்களிடையே பேசி லட்டு வழங்கி பிறந்தநாள் கொண்டாடினார்கள்.திருச்செந்தூர் வ.உ.சி தெருவில் உள்ள ஏழை குழந்தைகளுக்கு திருச்செந்தூர் நோட்டு பேனா, லட்டு  வழங்கி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. திவ்யபாரதி வாழ்த்திப் பேசினார். திருச்செந்தூர் மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் அனைவருக்கும் ஆப்பிள்,பிஸ்கட் வழங்கினார்கள்.                                                                                                                                            
தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் சேகர் பேசியதாவது...நடிகர் கமல் ஹாஸன் இன்று 64 வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். உலக நாயகன், கலைஞானி என ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் கமலஹாசன் 1954-ஆம் வருடம் நவம்பர் மாதம் 7-ஆம் தேதி தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஸ்ரீனிவாசன்-ராஜலட்சுமி தம்பதிகளுக்கு பிறந்தார்.
நடிகர் கமலஹாசன் 1954-ஆம் வருடம் நவம்பர் மாதம் 7-ஆம் தேதி தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஸ்ரீனிவாசன்-ராஜலட்சுமி தம்பதிகளுக்கு பிறந்தார். இவர் 1960-ஆம் ஆண்டு ‘களத்தூர் கண்ணம்மா’ என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். தொடர்ந்து நடிகராக மட்டுமல்லாது திரைக்கதையாசிரியர், இயக்குனர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர், நடன கலைஞர் என பன்முகத் தன்மை கொண்டவராக தமிழ் சினிமாவில் இன்றளவும் விளங்கி வருகிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். தமிழ் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.
இவர் 4 தேசிய விருதுகள், 19 பிலிம்பேர் விருதுகள் உள்ளிட்ட பல இந்திய விருதுகளை பெற்றுள்ளார். இந்திய திரைத்துறைக்கு ஆற்றிய பணிக்காக இவருக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்துள்ளது. திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த இந்திய நடிகர்கள் மிகச்சிலரில் ஒருவராகவும் திகழ்ந்து வருகிறார்.
 ஆகையால் சமூக ஆர்வம் கொண்ட அடுத்த முதல்வர் கமலஹாசன் என்று தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் சேகர் திருச்செந்தூரில் பரபரப்பாக பேசினார்.   
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo