விளாத்திகுளத்தில் 24வியாபாரிகள் உள்பட 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
விளாத்திகுளத்தில் 24வியாபாரிகள் உள்பட 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தூத்துக்குடி 2020 ஜூலை 6 ;விளாத்திகுளத்தில் 24வியாபாரிகள் உள்பட 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
விளாத்திகுளத்தில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் கடந்த 4ஆம் தேதி விளாத்திகுளம் நகரிலுள்ள வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.இதில் 104 வியாபாரிகள் கலந்து கொண்டு தங்களது சளி மாதிரி வழங்கினார். இதன் முடிவு இன்று வெளியாகியுள்ளது. இதில் 24 வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கே.சுந்தரேஸ்வரபுரத்திற்கு கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.