Onetamil News Logo

தகுதிகேற்ப வேலை வழங்கவில்லை, கண்துடைப்புக்கு, வழங்கபட்டுள்ளது   என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தூத்துக்குடியில் தெரிவித்துள்ளார். 

Onetamil News
 

தகுதிகேற்ப வேலை வழங்கவில்லை, கண்துடைப்புக்கு,வழங்கபட்டுள்ளது   என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தூத்துக்குடியில் தெரிவித்துள்ளார். 


தூத்துக்குடி 2018 செப் 30 ;    தூத்துக்குடி 2018 செப் 30 ;  அதிமுகவுடன் நான் நெருங்கி வரவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தூத்துக்குடியில் தெரிவித்துள்ளார்.
                                                                                                                                                 எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின் நிறைவு விழா சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில்  நாளை நடைபெற உள்ளது. சட்டப்பேரவை தலைவர் தனபால் தலைமை வகிக்கும் இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆர் உருவப்படத்தை திறந்து வைத்து நூற்றாண்டு விழா மலரையும் வெளியிடுகிறார்.
                                                                                                                                                    எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா அழைப்பிதழில் வாழ்த்துரை வழங்குபவர்கள் பட்டியலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், டிடிவி தினகரன் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் இருவருமே எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்கபோவதில்லை என தெரிவித்துள்ளனர்.
                             
இந்நிலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவுக்கு அழைப்பு விடுத்தால் கலந்துகொள்வேன் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்திருந்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவுக்கு அழைப்பு விடுத்தால் கலந்துகொள்வேன் என கூறியதன் மூலம் திருமாவளவன் எங்களுடன் நெருங்கி வருகிறார் அவருக்கு பாராட்டுக்கள் என்றார்.                                                                                                                                                                    இந்நிலையில் தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் அமைச்சர் ஜெயக்குமாரின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார். எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா விடுதலை சிறுத்தைகள் பங்கேற்குமா என உதவியாளர்கள் கேட்டார்கள் எம்ஜிஆர் அவர்கள் குறிப்பிட்ட ஒரு கட்சியின் தலைவராக பார்க்கப்பட வேண்டிய எம் அல்ல சத்துணவுத் திட்டம் கிராம நிர்வாக அலுவலர் திட்டம் ஆகியவற்றின் மூலம் மிகப்பெரிய அளவில் அனைத்து தரப்பு மக்களின் நன்மதிப்பை பெற்று இருக்கிறார் எனவே அவர் அனைவருக்கும் பொதுவானவர் எனவே அவரின் நூற்றாண்டு விழாவிற்கு அழைத்தால் வருகிறேன் என்று கூறி இருந்தேன் ஆனால் அவர்கள் அழைக்கவில்லை.  அவர்கள் கூறுவது வியப்பாக உள்ளது அழைத்தால் செல்வீர்களா எனக் கேட்டதற்கு ஆகட்டும் பார்க்கலாம் என்றார்.
 
எம்ஜிஆர் அனைவருக்கும் பொதுவானவர் என்பதால் அவரது விழாவில் பங்கேற்க ஆர்வம் காட்டினேன்.டிசம்பர் 10 ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சமாதான பயங்கரவாதத்தை எதிர்த்து தேசம் காப்போம் மாநாடு நடைபெறுகிறது இந்த மாநாட்டில் திமுக காங்கிரஸ் இடதுசாரிக் கட்சிகள் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர் குறிப்பாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு க ஸ்டாலின் இதுபோல இடதுசாரி கட்சிகள் தேசிய தலைவர்கள் பங்கேற்கின்றனர்.  அமைச்சர் ஜெயக்குமார் விடுதலை சிறுத்தைகள் கட்சி எங்களை நோக்கி வருவது போல் உள்ளது என்று கூறியுள்ளாரே என்று கேட்டதற்கு,,தகுதி கேற்ப வேலை வழங்கவில்லை,,கண் துடைப்புக்கு,வழங்கபட்டுள்ளது                                                  
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து அறிவிப்பு செய்திருக்கிறார்கள், அதற்கு உரிய கால அவகாசம் தேவைப்படும் முன்கூட்டி அதைப் பற்றி கருத்து சொல்வது சரியாக இருக்காது என்றார் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்குப் பதிலாக வேதாந்தா குழுமத்தின் அனுமதி வழங்கப் போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தை  புகைத்து கொள்ளாமல் மத்திய மாநில அரசுகள் செயல்படுவதன் மூலம் மீண்டும் தூத்துக்குடியில் அந்த ஆலையை இயங்கச் செய்வதற்கு மத்திய மாநில அரசுகள் ஏதுவான சூழ்நிலைகளை உருவாக்கி வருவதாக தெரிகிறது.
 தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை  நிரந்தரமாக மூடுவதற்கு உரிய ஆணை பிறப்பிக்கப்படவில்லை. இது ஒரு வலிமையான ஆணையாக இல்லை அதனால்தான் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அதை ஆய்வு செய்ய் ஒரு குழுவை நியமிக்க முடியாது ஆகவே மத்திய மாநில அரசுகள் தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆகியவை சேர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை நிர்வாகத்திற்கு உதவி செய்கின்ற வகையில் உள்ளது என்றார் துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதில் கோரிக்கையினை ஏற்று தகுதிக்குரிய வேலையை வழங்கப்படவில்லை ஏதோ ஒப்புக்கு ஏதோ ஒரு வேலை வழங்கியுள்ளார்கள் இந்த கருத்தை அரசு பரிசீலிக்க வேண்டும் உரிய அளவில் உரிய வேலை வாய்ப்பினை வழங்க முன்வர வேண்டும் என்றார் அந்தக் குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் அவரது கல்வித் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் ஐய்யப்பன் கோவிலில் பெண்கள் நுழையலாம் ஆண் பெண் வேறுபாடு கூட கூடாது என்ற அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தான் பார்க்க வேண்டும் என்றார் திருமுருகன் காந்தி மீது அவர்கள் திட்டமிட்டு நெருக்கடியை தருகிறார்கள் என்று தெரிகிறது இது குறித்து அவரிடம் நேரில் சந்தித்து உள்ள நிலைமையை எண்ண இருப்பதாக கூறினார்.
 நடிகர் கருணாஸ்  மீது திட்டமிட்டு அரசு வழக்கு தொடருவது குறித்து கேட்டதற்கு ஆட்சியாளர்களுக்கு மிகவும் நெருக்கமானவர் அவர் தான் அரசு எவ்வாறு செயல்படுகிறது என்பது தெரியும் என்றார்.

 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo