Onetamil News Logo

வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் ஒப்புகை சீட்டு இயந்திரம் (EVM-VVPAT) தொடர்பான வாகன விழிப்புணர்வு இயக்க பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, கொடியசைத்து துவக்கி வைத்தார்

Onetamil News
 

வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் ஒப்புகை சீட்டு இயந்திரம் (EVM-VVPAT) தொடர்பான வாகன விழிப்புணர்வு இயக்க பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, கொடியசைத்து துவக்கி வைத்தார்


தூத்துக்குடி2019 பிப்ரவரி 9 ;தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் ஒப்புகை சீட்டு இயந்திரம் (EVM-VVPAT) தொடர்பான வாகன விழிப்புணர்வு இயக்க பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, கொடியசைத்து துவக்கி வைத்தார்
தூத்துக்குடி காய்கறி மார்கெட் ரவுண்டானா பகுதியில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் ஒப்புகை சீட்டு இயந்திரம் (EVM-VVPAT)  தொடர்பான வாகன விழிப்புணர்வு இயக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,  கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 1593 வாக்குச்சாவடி மைய பகுதிகளில் விழிப்புணர்வு வாகனங்கள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் ஒப்புகை சீட்டு இயந்திரம் தொடர்பான விழிப்புணர்வு பயிற்சிகள் இன்றுமுதல் 13.02.2019 வரை 5 நாட்கள் நடத்தப்படவுள்ளது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் இவ்விழிப்புணர்வு பணிகளுக்கு தலா 6 விழிப்புணர்வு வாகனங்கள் என மொத்தம் 36 வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இ;ந்த விழிப்புணர்வு வாகனத்தில் 4 ஊழியர்கள் மற்றும் காவலர் உட்பட 5 நபர்கள் உள்ளனர். எந்தெந்த இடங்களில் விழிப்புணர்வு பயிற்சி நடைபெறும் என்ற விவரம் வட்டாட்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலவலகங்களில் வாக்குச்சாவடி மையங்களில் ஒட்டப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்குப்பதிவு செய்தல் மற்றும் வாக்குப்பதிவு செய்தவுடன் ஒப்புகை சீட்டினை பார்வையிடுதல் குறித்து பொதுமக்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் ஒவ்வொரு வாக்குசாவடி மையங்களிலும் குறைந்தபட்சம்  90 நிமிடங்கள் விழிப்புணர்வு பயிற்சி நடைபெறும்.
இதன்மூலம் வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல், வாக்களிப்பதன் அவசியத்தை எடுத்துரைத்தல், வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களிடையே விளக்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இளம் வாக்காளர்கள் மற்றும் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இன்றைய தினம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் யாருக்கு வாக்கு செலுத்தினோம் என்பதை அறியும் வகையில் வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டு இயந்திரம்  ஆகியவற்றின் பயன்பாடு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.  
  மேலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டு இயந்திரம் குறித்தும் விளக்கமாக எடுத்துரைக்கப்படும். எனவே, பொதுமக்கள் அனைவரும் பயிற்சியில் கலந்துகொண்டு வாக்குபதிவு மற்றும் ஒப்புகை சீட்டு இயந்திரம் ஆகியவற்றின் பயன்பாடு குறித்து அறிந்துகொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
தொடர்ந்து, தூத்துக்குடி டிடிடிஏ பள்ளியில் வாக்குச்சாவடி தேர்வு மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டு இயந்திரம் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்படுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் மு.வீரப்பன், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரான் ஜீத் சிங் கலோன்,., உதவி ஆட்சியர் (பயிற்சி) மரு.அனு, ., தேர்தல் வட்டாட்சியர் நாகராஜன், வட்டாட்சியர் திருமதி.சிவகாமசுந்தரி மற்றும் அலுவலர்கள்; கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo