Onetamil News Logo

தூத்துக்குடியில் வரும் 23ம் தேதி  மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் 

Onetamil News
 

தூத்துக்குடியில் வரும் 23ம் தேதி  மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் 


தூத்துக்குடி 2019 அக்டோபர் 21 ;தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 23ம் தேதி  அன்று மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது.மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது அறிவிப்பு ;மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி,  விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் வருகின்ற 23ம் தேதி அன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இக்குறைதீர் கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாற்றத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம். பெறப்படும் மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களால் தகுதியின் அடிப்படையில் பரிசீலிக்கப்படும். முகாமில் கலந்து கொள்ளும் மாற்றுத்திறனாளிகள் தங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை அசல் மற்றும் நகல், குடும்ப அட்டை அசல் மற்றும் நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.
எனவே இந்த வாய்ப்பை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக் கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார்
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo