தூத்துக்குடியில் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவிலில் 3ம் ஆண்டு வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை
தூத்துக்குடி, 2019 பிப்ரவரி 10 ; தூத்துக்குடியில் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவிலில் 3ம் ஆண்டு வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நடந்தது. தூத்துக்குடி மேலசண்முகபுரம் வண்ணார் 3ம் தெரு தொடர்ச்சி பகுதியில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவிலில் 3ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடந்தது.
தூத்துக்குடியில் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
தூத்துக்குடி பழமை வாய்ந்த மேலச்சண்முகபுரம் வண்ணார் மூன்றாவது தெருவில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜையும், அம்மனுக்கு விசேஷ புஷ்ப அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றது. சுமார் 100 வருடம் பழமை வாய்ந்த இத்திருக்கோவில் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு காவல் தெய்வமாகவும், அளந்து கொடுக்கும் அம்மனாக இருந்து காட்சி கொடுத்து, கேட்ட வரம் கொடுக்கும் தெய்வமாக திகழ்வதால் எல்லா வரமும் கொடுக்கும் தாயாக திகழ்வதால், சுமங்கலிகள் எல்லாம் ஓன்று சேர்ந்து விளக்கு பூஜை ஏற்றுவதாகவும் இதனால் மாங்கல்ய பலம், குழந்தை வரம், உட்பட எல்லா சௌபாக்கியங்களையும் தருவதால் இப்பகுதி மக்கள் கண்கண்ட தெய்வமாக விளங்கி வருவதாக இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இந்தக் கோவிலில் காலை விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம்,கணபதி ஹோமம், சக்தி ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை,போன்றவை நடைபெற்றது. அதன் பின்னர் விமானம் மற்றும் மூலஸ்தானம் அபிஷேகம், வருஷாபிஷேகம், தீபாராதனை,பிரசாதம் வழங்குதல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன. விழாவிற்க்கான ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் சுப்பிரமணியன் தலைமையில், முன்னாள் கவுன்சிலரும் கோவில் தர்மகர்த்தாவுமான ஏ.கோட்டுராஜா, விழா கமிட்டியாளர்கள் எஸ்.பொன்ராஜ், பழனிக்குமார், ஜி.பொன்ராஜ், கே.செல்வராஜ், சுயம்புலிங்கம், மற்றும் மகளிர் அணியினர் சிறப்பாக செய்திருந்தனர்.