Onetamil News Logo

தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றத் தலைவர் சண்முகசுந்தரம் வீட்டில்  நவராத்திரி விழாவையொட்டி, கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு 

Onetamil News
 

தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றத் தலைவர் சண்முகசுந்தரம் வீட்டில்  நவராத்திரி விழாவையொட்டி, கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு 


தூத்துக்குடி 2019 அக்டோபர் 6 ; நவராத்திரி விழா, கோயில்களில் மட்டுமின்றி வீடுகளிலும் களைகட்டியுள்ளது. பலவிதமான பொம்மைகளை வைத்து பொதுமக்‍கள் தங்கள் இல்லங்களில் வழிபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடியில் வீடுகள், கோவில்களில் உட்பட நகரின் பல்வேறு இடங்களில் பெண்கள் கொலு பொம்மை கண்காட்சி வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி கீழசண்முகபுரம் பகுதியில் தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றத் தலைவர் சண்முகசுந்தரம் வீடு இருக்கிறது.இவரது வீட்டில்  நவராத்திரி விழாவையொட்டி, கொலு பொம்மைகளை வைத்து கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர். இந்த கொலு கண்காட்சியில், முருகப்பெருமான் காட்சி, தைப்பூச திருவிழா காட்சி, அத்திவரதர் நின்ற மற்றும் சயன கோலம், தரையில் தவழும் நீலவண்ண குழந்தை கண்ணணின் அற்புத தோற்றம், பாற்கடலில் பள்ளிகொண்ட பெருமாள்,  தேசிய தலைவர்கள், திருக்‍கல்யாண செட், தசாவதார பொம்மைகள், இயற்கை விழிப்புணர்வு பொம்மைகள் மற்றும் பல்வேறு சுவாமி பொம்மைகள் உள்ளிட்ட சுமார் 200க்கும் மேற்பட்ட பொம்மைகள் கொலுவில் அழகாக வைக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து  பஜனை பாடல்கள் இசைக்கப்பட்டன.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo