Onetamil News Logo

மக்களுக்கான மாற்று அரசியல் களம்  தமிழகம் முழுவதும் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் 

Onetamil News
 

மக்களுக்கான மாற்று அரசியல் களம்  தமிழகம் முழுவதும் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் 


      
தூத்துக்குடி 2019 ஏப்ரல் 17 ;வாக்காளர் அனைவரும் 100%வாக்களிக்கவும் அடுத்து வரும் தேர்தல்களில் விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல்முறையினை இந்தியாவில் கொண்டுவரவும்,வாக்குபெட்டி முறையை பயன்படுத்தவும், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டவும்,சமூக நீதியை பாதுகாக்கவும் ,மதவாத கார்பரேட் அரசியலுக்கு எதிராகவும்,தமிழகத்தின் இயற்கை வளங்களை பாதுகாக்கவும் ,பூர்ண மதுவிலக்கை அமுல்படுத்தவும்  தமிழகம் முழுவதும் மக்கள் இயக்கங்களை ஒருங்கிணைத்து நவம்பர் மாதத்தில் இருந்து  விழிப்புணர்வு பிரச்சாரத்தை  மேற்கொண்டு வருகிறோம் 
                                                                                                                                       தூத்துக்குடியில் சமம்குடிமக்கள் இயக்கத்தின் மாநில தலைவரும், மக்களுக்கான மாற்று அரசியல் களத்தின் மாநில ஒருங்கிணைப்பாளருமான வழக்கறிஞர் சி.சே.இராசன் பேட்டி
மக்களுக்கான மாற்று அரசியல் களம் சார்பில் மக்கள் தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்வும்,அனைவரும் வாக்களிக்க கோரி விழிப்புணர்வு பிரச்சாரமும் தூத்துக்குடியில் ஏப்ரல்15  அன்று நடைப்பெற்றது.கூட்டத்திற்கு மக்களுக்கான மாற்று அரசியல் களம் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர்.சி.சே.இராசன் தலைமை தாங்கினார்.தூத்துக்குடி மண்டல ஒருங்கிணைப்பாளர் திரு.ஜான் பி ராயன் முன்னிலை வகித்தார். வழக்கறிஞர்.எஸ்.பி.மாடசாமி அனைவரையும் வரவேற்றார்.
மக்கள் தேர்தல் அறிக்கையினை அன்னம் பத்திரிகை ஆசிரியர். அருட்திரு.ச.தே..செல்வராஜ் வெளியிட வழக்கறிஞர்.இ.அதிசய குமார் பெற்றுக்கொண்டார்.அறிக்கை குறித்து தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர்.மீ.த.பாண்டியன்,கிறித்தவ வாழ்வுரிமை இயக்க மாநில அமைப்பாளர் அருட்திரு.சுந்தரி மைந்தன்,மக்கள் நல இயக்கம் மா.தங்கையா, அருட்பணி.ரூபட் அருள்வளன், ஜான் மைக்கேல் கோஸ்டா,விடுதலை சிறுத்தைகள் இக்பால் ஆகியோர் கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டனர். இறை அன்னை ஆசிரியர் ஏ.ஜே.ஆன்றனி நன்றி கூறினார்.
மக்களுக்கான மாற்று அரசியல் களம் மாநில ஒருங்கிணைப்பாளரும், சமம்குடிமக்கள் இயக்கத்தின் மாநிலதலைவருமான வழக்கறிஞர் சி.சே.இராசன்  கூறும் போது தேர்தல் தேதி அறிவிப்பு வருவதற்கு முன்பே நவம்பர் மாதத்தில் இருந்து 110 மக்கள் அமைப்புகளை ஒருங்கிணைந்து அவ் அமைப்புகளின் சார்பாக மக்களுக்கான மாற்று அரசியல் களம் அமைப்பினை உருவாக்கி அவ் அமைப்பின் சார்பாக மாற்று அரசியலுக்கான மக்கள் தேர்தல் அறிக்கை 2019 ஐ முதலில் சென்னையில் வெளியிட்டோம் தொடர்ச்சியாக மதுரை,திருச்சி ,வேலூர், சேலம், திருநெல்வேலி, தூத்துக்குடி என மண்டல வாரியாக வெளியிட்டு அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும் என்ற பிரச்சாரத்தை வலியுறுத்தி வருகின்றோம்.
இந்திய துணைக்கண்டமானது பன்முகத்தன்மை கொண்டநாடு. வேற்றுமையில் ஒற்றுமை என்ற நிலையில் அனைவரும் ஒன்றுப்பட்டு வாழும் சூழலைக்கொண்டது.இத்தைகைய நல்லிணக்கச் சூழல் இன்றைக்கு பாதிக்கப்பட்டு வருகிறது.இன்னும் சொல்லப்போனால் மிகப்பெரிய ஆபத்தினை நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கிறது.அடித்தட்டு மக்களின் லாழ்க்கை வீழந்து வருகிறது.ஜனநாயகமும் அதன் மூலம் மக்களுக்கு கிடைக்கும் சமநீதியும் வலுவிழந்துவிட்டன.சட்டத்தின் ஆட்சியும் மாண்புகளும் மதிக்கப்படவில்லை.பின்பற்ற வில்லை அச்சம் கலந்த ஒரு ஜனநாயக சூழல் உள்ளது.இது நாட்டிற்கு நல்லதல்ல இதற்கெல்லாம் மாற்றாக மக்களுக்கான தேர்தல் அறிக்கையை அரசியல் கட்சிகள் கையிலெடுத்து வழிநடத்த வேண்டும் என்ற அடிப்படையிலே இவ் அறிக்கை தயார் செய்யப்பட்டு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் மக்கள் மத்தியிலும் பிரச்சாரம் செய்து வருகிறோம்.
இன்றைய தேர்தல் களமானது கார்பரேட் நலன்,மதவாதம்,சாதி,தனிப்பட்ட விருப்பு வெறுப்பு, ஆளுமை, சுயவிளம்பரம், தன்நலம், திரைத்துறையின் நாயகச்சதி போன்றவற்றிற்கு ஆட்பட்டு வருவதை தான் பார்க்கிறோம். இதிலிருந்து வித்தியாசப்பட்ட மதவாதத்திற்கும்,கார்பரேட் அனசியலுக்கும் எதிராக நிற்கிற,சட்டத்தின் ஆட்சியை தூக்கிப்பிடிக்கிற, சமூகநீதியை நிலைநாட்டுகிற,விகிதாச்சார பிரதிநிதித்துவத் தேர்தல் முறையை கொண்டுவர தேர்தல் அறிக்கையில் உத்தரவாதம் அளித்துள்ள கட்சிகளை மக்கள் அடையாளம் கண்டு வாக்களிக்க வேண்டியதும் ,தேர்தலை கண்காணிக்க வேண்டியதும்  அவசியம் என்றார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo