Onetamil News Logo

தூத்துக்குடியில் 17 வது  நாடாளுமன்ற தேர்தலில்  69.97% வாக்குப் பதிவானது. 

Onetamil News
 

தூத்துக்குடியில் 17 வது  நாடாளுமன்ற தேர்தலில்  69.97% வாக்குப் பதிவானது. 


தூத்துக்குடி  2019 ஏப்ரல் 18 ;தூத்துக்குடியில் 17 வது  நாடாளுமன்ற தேர்தலில்  69.97% வாக்குப் பதிவானது. 
                                    
இன்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் 69.03 சதவீதம் வாக்குபதிவாகி இருக்கிறது. தூத்துக்குடி – 65.84%, திருச்செந்தூர் – 68.68 %, திருவைகுண்டம் – 71.75 %, கோவில்பட்டி – 64.05 %, ஓட்டப்பிடாரம் 69.06 %, விளாத்திகுளம் – 76.96 % ஆக மொத்தம் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் 69.03 % வாக்குப்  பதிவு நடைபெற்றிருக்கிறது. இது கடந்த தேர்தலைவிட 00.94% குறைவானதாகும்.
                        
தூத்துக்குடியில் தி.மு.க சார்பில் கனிமொழியும் பா.ஜ.க  மாநில தலைவர் தமிழிசையும் போட்டி என்பதனால் இந்தத்  தொகுதி மிகவும் முக்கியமாக பேசப்பட்டது. மோடி எதிர்ப்பு, 13 பேர் கொல்லப்பட்ட பிரச்னை போன்றவற்றால் இந்த தேர்தலில் தூத்துக்குடியில் அதிக அளவு வாக்குப் பதிவு  ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் 00.66 சதவீதம் குறைந்திருக்கிறது. இதை வைத்து பார்க்கும்போது ஆதரவான பிரசாரமும் எதிரான பிரசாரமும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த வில்லை என்பதையே காட்டுகிறது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo