Onetamil News Logo

ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் இணையவழி திறன் மேம்பாட்டு நிகழ்வு

Onetamil News
 

ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் இணையவழி திறன் மேம்பாட்டு நிகழ்வு


தூத்துக்குடி 2020 ஜூலை 16 ;ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் திறன் மேம்பாட்டு நிகழ்வு இணையவழி மூலம் நடைபெற்றது
 ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரியின் உள் தரமதிப்பீட்டுக் குழு சார்பாக “வெற்றிக்கு வழி அவசியமான மென்திறன்” என்ற தலைப்பில் திறன்மேம்பாட்டு நிகழ்வு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர்.ந.மீனாகுமாரி, வரவேற்புரை ஆற்றினார். இயக்குநர் முனைவர்.கு.சத்யபாமா,வாழ்த்துரை வழங்கினார். உள்தரமதீப்பீட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர்.த.லில்லிகோல்டா அவர்கள் அறிமுகஉரை ஆற்றினார். கார்த்திகா கணேஷ், நடன இயக்குநர் ‘சக்தி ஷேத்ராலயா நடனப்பள்ளி’ கனடா ‘வீ கேர் ஸ்கின் கிளினிக்’ மேலாண்மை இயக்குநர் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கல்வி, பிறகலைத்திறன்கள் இருந்தும் நம்பிக்கை, ஊக்கம், முயற்சி இல்லாவிட்டால் வாழ்வில் வெற்றி.  இல்லை தோல்விக்கு தற்கொலை முடிவல்ல வெற்றிக்கான மென்திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று சிறந்ததொரு கருத்துரை வழங்கினார். கணிதத்துறைப் பேராசிரியர் முனைவர்.கெ.பாலதீப அரசி ,நன்றியுரை நல்கினார். 455பேர் பங்கு பெற்று பயனடைந்தனர். 
இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை உள்தர மதிப்பீட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர்.த.லல்லிகோல்டா, முனைவர்.து.ராதா, முனைவர்.கெ.பாலதீப அரசி மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து செய்திருந்தனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo