Onetamil News Logo

தூத்துக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தொடுதிரை சேவையை முதன்மை மாவட்ட நீதிபதி டி. இளங்கோவன்  தொடங்கி வைத்தார்.

Onetamil News
 

தூத்துக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தொடுதிரை சேவையை முதன்மை மாவட்ட நீதிபதி டி. இளங்கோவன்  தொடங்கி வைத்தார்.


தூத்துக்குடி 2018 அக்டோபர் 10 ;தூத்துக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தொடுதிரை சேவையை முதன்மை மாவட்ட நீதிபதி டி. இளங்கோவன் தொடங்கி வைத்தார்.                                                                            
                        
உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் வழிகாட்டுதல்படி தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்குகளின் விவரங்களை உடனடியாக தெரிந்து கொள்ளும் வகையில் தொடுதிரை கணிணி சேவை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சேவையை முதன்மை மாவட்ட நீதிபதி டி.இளங்கோவன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி 2வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி பி.எஸ்.கௌதமன், தலைமை குற்றவியல் நீதிபதி டி.பகவதியம்மாள், சார்பு நீதிபதி டி.செல்வம், மாவட்ட சட்டப்பணி ஆணைகுழு செயலாளர் ஆர்.சாமுவேல் பெஞ்சமின், மற்றும் தூத்துக்குடி நீதித்துறை நடுவர்களும், அரசு வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கறிஞர்கள், அனைத்து நீதித்துறை ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து முதன்மை மாவட்ட நீதிபதி டி.இளங்கோவன்  பேசியதாவது- தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் உள்ள வழக்குகளின் நிலவரத்தை உடனடியாக தெரிந்து கொள்ளவும் மற்றும் வழக்காடிகள் பெயர் மற்றும் எண் மற்றும் வழக்கறிஞர்களின் பெயர்கள் தெரிந்தோலே போதுமானது. அந்த வழக்கு விபரங்கள், வழக்கின் தற்போதைய நிலை மற்றும் வழக்கு நடைபெறும் தேதி மற்றும் வழக்கு பட்டியல் போன்றவற்றை உடனடியாக இந்த தொடுதிரை கணிணி மூலம் தெரிந்து கொண்டு பொதுமக்களும் மற்றும் வழக்கறிஞர்களும் பயன் அடையலாம்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo