Onetamil News Logo

காவல் ஆய்வாளர் புவனேஸ்வரியை  காவல்துறையை விட்டே நிரந்தரமாக நீக்கினால் தான் பாடமாக அமையும் 

Onetamil News
 

காவல் ஆய்வாளர் புவனேஸ்வரியை  காவல்துறையை விட்டே நிரந்தரமாக நீக்கினால் தான் பாடமாக அமையும் 


விருத்தாசலம், 2019 ஜூலை 14 ; காவல் ஆய்வாளர் புவனேஸ்வரியை  காவல்துறையை விட்டே நிரந்தரமாக நீக்கினால் தான் பாடமாக அமையும் (வீடியோ ஆதாரம் கீழே) உள்ளது.
விருத்தாசலத்தை அடுத்த வேப்பூர் அருகே உள்ள அரியநாச்சி கிராமத்தில் 80 வருடம் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. கோவிலை அதே பகுதியை சேர்ந்த சின்னக்கல்பூண்டி வகையறாவினர் பராமரித்து வந்தனர். இந்நிலையில் கோவிலின் கட்டடங்கள் அனைத்தும் சேதமடைந்ததால் கோவிலை இடித்து புனரமைக்கும் பணியை தற்போது மேற்கொண்டனர். ஆனால் இதற்கு அதே பகுதியை சேர்ந்த மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து தடுத்து வந்தனர்.இதனால், இரண்டு தரப்பினருக்கும் ஏற்பட்ட தகராறின் காரணமாக கோவில் விவகாரம் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு 144தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த சில வாரத்திற்கு முன்பு இந்த கோவிலை பார்ப்பதற்கு பாஜகவில் இருந்து எச்.ராஜா  வந்துள்ளனர். அப்போது அவரை கோவிலுக்குள் விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதையடுத்து 144 தடை உத்தரவு நீக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் மற்றொரு தரப்பினர் கோவிலின் சிலையை எடுத்து பூஜை செய்துள்ளனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே மீண்டும் பிரச்சனை நடந்துள்ளது. தொடர்ந்து, ஒரு தரப்பு அம்மன் சிலையை எடுத்து கொட்டகை அமைத்து, பூஜைகள் செய்தனர். இந்நிலையில், மற்றொரு தரப்பினர் நேற்று முன்தினம் வேப்பூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு மனு வழங்கினர். அதில், கோவில் பிரச்சனை கோர்ட்டில் வழக்கு நடக்கும் நிலையில், எட்டு பேர் கொண்ட கும்பல் சுவாமி சிலையை திருடியதாக கூறியுள்ளனர். அப்போது, உதவி ஆய்வாளர் சுப்ரமணியன், இது வருவாய் துறை ரீதியானதாக உள்ளதால் திட்டக்குடி தாசில்தாரிடம் முறையிட கூறினார். 
 பின்னர், நேற்று சின்னக்கல்பூண்டி வகையறாவினர் வேப்பூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இச்செய்தியை சேகரிப்பதற்காக வேப்பூர் தினகரன் நிருபர் வேளாங்கண்ணி மற்றும் தினமலர் நிருபர் தமிழரசன் மற்றும் பல்வேறு நாளிதழ் மற்றும் மீடியா நிருபர்கள் சென்றுள்ளனர். அப்போது தொழுதூர் ஆய்வாளர் புவனேஸ்வரி வேப்பூர் காவல் நிலையத்தில் பொறுப்பு வகித்திருந்தார். இவர் ஆர்ப்பாட்டம் செய்தவர்களை அசிங்கமாகவும் தரக்குறைவாக திட்டி அங்கிருந்து வெளியேறுமாறு விரட்டியதுமில்லாமல். பணி செய்துகொண்டு இருந்த, தினகரன் நிருபர் வேளாங்கண்ணி மற்றும் தினமலர் நிருபர் தமிழரசன் ஆகிய இருவரையும்.. புகைப்படம் எடுக்கக் கூடாது என மிரட்டியுள்ளார்.
அதற்கு அவர்கள்.. நாங்க செய்தி சேகரிக்க தான் வந்தோம் என கூறியதற்கு ஒரு நிருபர் என்று கூட பாராமல் அவர்களை கெட்ட கெட்ட வார்த்தைகளால் அசிங்கமாக திட்டி, கையில் இருந்த கேமராவை பிடுங்கி உடைக்க முயற்சித்துள்ளார்.
 அதுமட்டுமில்லாமல்.. காவல் துறை அதிகாரி சீருடை அணிந்த கர்வத்துடன் உச்சத்திற்கு சென்று… அவர்கள் இருவரையும் ஒரு விசாரணைக் கைதி போல் நடத்தி.. கைதிகளை உட்காரவைக்கும் அறைக்குள் உட்கார வைத்ததுமில்லாமல்… மனிதாபமற்ற முறையில் சரமாரியாக லத்தியால் தாக்கியுள்ளார்.
அந்த தகவலை அறிந்த வேப்பூர், திட்டக்குடி, விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நிருபர்கள் காவல் நிலையம் முன்பு திரண்டு இருவர் இருவரையும் வெளியே விடுமாறு கூறியுள்ளனர். அதன் பின்பு கடலூர் காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும் விழுப்புரம் காவல்துறை தலைவர் கூறியும் கேட்காமல் ஆய்வாளர் புவனேஸ்வரி.. பைத்தியம் பிடித்தவர் போல் நடந்து கொண்டுள்ளார்.
அதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட நிருபர்களின் உறவினர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் திரண்டு போராட்டங்கள் நடத்தப் போவதாக அறிவித்தனர். ஆனாலும் அதையெல்லாம் காதில் வாங்காமல், ஆறு மணி நேரத்திற்கு பிறகு மாலை 5 மணி அளவில் அவர்கள் விடுவித்துள்ளார்.
செய்தி சேகரிக்கச்சென்ற ஒரு பத்திரிகையாளருக்கே இந்த நிலைமை என்றால்… புகார் கொடுக்க வரும் பொதுமக்களின் நிலை.. கேள்விக்குறியாகவே உள்ளது.
புகார் கொடுக்க வரும் அப்பகுதி மக்களை… அசிங்கமாக திட்டி அனுப்புவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
வெறும் பணத்திற்காக வேலை செய்யும் இவரை போன்ற ஒரு சில காவல் துறை அதிகாரிகளால் ஒட்டுமொத்த காவல்துறையின் காக்கி உடையிலும்.. கரை படிய வைக்கிறது என்று, இவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.
தவிர.. இவர் மீது ஏற்கனவே பல புகார்கள் உள்ளது… உதாரணமாக க்ரைம் இன்வெஸ்டிகேஷன் யூனிட்டை சேந்த ஒரு காவலர்.. நடக்கும் தகவளை படம் பிடிக்க… உடனே அங்கு வந்த ஆய்வாளர் புவனேஸ்வரி தன்னுடைய துறையை சேர்ந்த காவலரை… தவறு செய்பவர்களின் லாரியை விட்டே.. காவலரை கொலை செய்ய சொன்னவர் எனபது குறிப்பிடத்தக்கது…
மேலும், பணத்திற்காக எந்த லெவலுக்கும் செல்லும் ஆய்வாளர் புவனேஷ்வரியை, பொருத்தவரை.. பணம் மட்டுமே மூலதனம்.
இவரை போன்ற ஆய்வாளரை பணியிட மாற்றம் செய்யப்படுவதை விட… காவல்துறையை விட்டே நிரந்தரமாக நீக்கினால்.. அடுத்த ஆய்வாளர் விஜயலட்சுமியை போல் (சென்னை கோட்டூர்புரம் காவல் நிலைய பழைய ஆய்வாளர்) இன்னொரு பெண் காவல் துறை அதிகாரி உருவாகாமல் தடுக்கலாம். 
கடலூர் மாவட்ட எஸ்பி ஸ்ரீஅபிநவ  மாவட்ட மூத்த நிருபர்கள் தினமலர் வீரகுமார் ,மக்கள் டிவி பாண்டியன்   டிவி பாண்டியன் உடன் தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் (Tuj)   நிர்வாகிகள் மாவட்டத் தலைவர் கனகு செய்தி தொடர்பாளர் தாமரை மற்றும் மக்கள் கருத்து செந்தில் , தினகரன் புகைப்படக் கலைஞர் ஸ்ரீபன், இளையராஜாவுடன் நேரில் முறையிட்டுப் பேசினோம் இதில் எஸ்பி அவர்கள் சம்பவத்திற்கு காவல்துறை பத்திரிகையாளர் இடையே உள்ள உறவில் ஏற்பட்டுள்ள இந்த கரும்புள்ளிக்கு கவலை தெரிவித்தார். இது போன்ற நிகழ்வுகள் இனி நடைபெறாமல் பார்த்துக் கொள்வதாக உறுதி அளித்துள்ளார். இதுபோன்று நிருபர்கள் தரப்பிலும் என்ன செய்ய வேண்டும் எப்படி அணுகவேண்டும் காவல்துறை தவறு இருந்தாலும் எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து விரைவில் நிருபர்கள் காவல்துறை ஆலோசனை கூட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்வதாக தெரிவித்துள்ளார். சென்னையிலிருந்தும் மற்றும் சங்கம் சார்பாக இந்த விவகாரம் குறித்து பேசியதையும் பேச்சுவார்த்தையின் போது தெரிவித்தார். எஸ்பி தொடர்ந்து  நிருபர்களை தங்களது பணியை தொடர வாழ்த்துக்கள் தெரிவித்தார். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo