Onetamil News Logo

ஸ்ரீவைகுண்டத்தில் இளம் வழக்கறிஞர்களுக்கு கொரோனா நிவாரண உதவித்தொகை 

Onetamil News
 

ஸ்ரீவைகுண்டத்தில் இளம் வழக்கறிஞர்களுக்கு கொரோனா நிவாரண உதவித்தொகை       


ஸ்ரீவைகுண்டம், 2020 மே.20:ஸ்ரீவைகுண்டத்தில் இளம் வழக்கறிஞர்களுக்கு கொரோனா நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுத்திட இந்தியா முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் வரும் 31ம் தேதி வரை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.
இந்நிலையில், கொரோனா ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் ரூ.4ஆயிரம் கொரோனா நிவாண உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இதன்படி, ஸ்ரீவைகுண்டம் நீதிமன்ற இளம் வழக்கறிஞர்களுக்கு கொரோனா நிவாரண உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நீதிமன்ற வளாகத்தில், ஸ்ரீவைகுண்டம் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜெகநாதன் ஜெபராஜா தலைமையில் நடைபெற்றது. சங்க செயலாளர் சங்கரன் முன்னிலை வகித்தார்.
தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் வழக்கறிஞர் பிரபு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இளம் வழக்கறிஞர்கள் 16பேருக்கு நிவாரண உதவித்தொகை வழங்கினார். இதில், சங்க நிர்வாகிகள் மற்றும் இளம் வழக்கறிஞர்கள் ஏனோக் பெஞ்சமி, பாரதி, சின்னத்துரை, கோமதி, ஜெபராஜ், கண்ணன் விஸ்வநாத், மொசம்பில் மீரான், பசும்பொன்ராஜா, ராஜதுரை, ராம்பிரபா, ராமலெட்சுமி, ராம்கோகிலா, சங்கரலிங்கம், செல்வராணி, ராமபிரசாத், சுடலை உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜெகநாதன் ஜெபராஜா, செயலாளர் சங்கரன் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo