Onetamil News Logo

9 மாதங்களாக கடலுக்கு செல்லாத விசைப்படகுகள் ; தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர் தீக்குளிக்க முயற்சி     

Onetamil News
 

9 மாதங்களாக கடலுக்கு செல்லாத விசைப்படகுகள் ; தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர் தீக்குளிக்க முயற்சி         


 தூத்துக்குடி2018 ஜூன்  13:தூத்துக்குடியில் 9 மாதங்களாக கடலுக்கு செல்லாத விசைப்படகுகள் : ரூ. 370 கோடி வருவாய் இழப்பு
தூத்துக்குடியில்  விசைப்படகு மீனவர்கள் மற்றும் நாட்டுப்படகு மீனவர்களிடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தூத்துக்குடியில் மீன்பிடி தடைகாலத்தை சேர்த்து கடந்த 9 மாதங்களாக விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் ரூ.370 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.                                          
                                                 
மீன்களின் இனப்பெருக்க காலத்தையொட்டி விசைப்படகுகள் கடலில்  மீன் பிடிக்க கடந்த ஏப்ரல்  15ம் தேதி முதல் விதிக்கப்பட்ட தடை ஜூன் 14ம் தேதி வரை நடைமுறையில் உள்ளது. இதன் காரணமாக தூத்துக்குடி  மீன்பிடித் துறைமுகத்தில் சுமார் 250க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க  செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே 45 நாட்களாக இருந்த இந்த  தடைகாலம் தற்போது 60 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் விசைப்படகு தொழிலாளர்களும்,  விசைப்படகு உரிமையாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தங்கு கடல் மீன்பிடிக்க அனுமதிகோரி வேலைநிறுத்த போராட்டம் மற்றும் கோர்ட்டில் நடந்து வரும்  வழக்கு ஆகியவற்றின் காரணமாக  கடந்த 8 மாதங்களுக்கு மேலாக தூத்துக்குடியில் விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகுகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் தற்போதுதான் தீர்ப்பு  வந்துள்ள நிலையில் விசைப்படகு மீனவர்கள் தடைக்காலம் முடிந்ததும் வரும் ஜூன்  15ம் தேதி முதல் மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல உள்ளதாகக் கூறப்படுகிறது.  இருப்பினும் கடந்த 8 மாதங்களில் மட்டும் பல ஆயிரக்கணக்கான மீனவர்கள் நேரடியாகவும்,  மறைமுகமாகவும் வேலையிழந்துள்ளனர். மீன்சார்பு தொழில்களும்  கடுமையாக  பாதிக்கப்பட்டுள்ளன. 
பொதுவாக நாளொன்றுக்கு மீன் பிடி துறைமுகம் மூலம்  குறைந்தபட்சம் ரூ.1.25 கோடி மதிப்பிலான மீன்கள் பிடித்து வரப்படும் நிலையில் மாவட்டத்தில் இதுவரை சுமார் ரூ.370 கோடிக்கு மேலாக வருவாய் இழப்பு   ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் விசைப்படகுகளுக்காக வாங்கப்பட்ட வங்கி கடன்களை கூட கட்ட முடியாத நிலைக்கு  விசைப்படகு உரிமையாளர்கள் பலர் தள்ளப்பட்டுள்ளனர்.  இதனால் வழக்கமாக  தடைகாலத்தில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகளை கூட முறையாக மேற்கொள்ள  முடியாத நிலையும் உருவாகியுள்ளதாகத் தெரிகிறது.
இதனிடையே வரும் ஜூன் 15ம் தேதி முதல்  விசைப்படகுகள் வழக்கம் போல கடலுக்குள் செல்லும் என உரிமையாளர்கள்  தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த 8 மாத ஸ்டிரைக் மற்றும்  வழக்கு காலம், 2 மாத மீன்பிடி தடைகாலம் ஆகியவற்றின் பாதிப்பில் இருந்து  விசைப்படகுகள், மீனவர்கள்,  தொழிலாளர்கள் பொருளாதார ரீதியாக  மீள்வதற்கே  இன்னும் இரு ஆண்டு காலத்திற்கும் மேல் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது.தூத்துக்குடி மீனவர்களின் பிரச்சனையை தீர்த்துவைக்க மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.                                                                       
  மீனவர்கள் தொழில் இல்லாததால் வறுமையில் வாடி வந்தனர். இதனால் இன்று  விசைப்படகு மீனவர்களை கடலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மீனவர் கென்னடி (47)  தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள மீன்வளத்துறை  துணை இயக்குநர் அலுவலகம்  முன்பு தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.                                                                                                                   
அருகில் உள்ளவர்கள் சுதாரித்துக்கொண்டு  தடுத்து அவருக்கு மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.                                                                                                                         
 தென்பாகம் காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து  வருகிறார்கள்.
  
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo