Onetamil News Logo

வ.உ.சி. துறைமுகத்திற்கு இலங்கை கொழும்பில் இருந்து INS JALASHWA  கப்பல் மூலம் பல்வேறு  மாநிலங்களை சேர்ந்த பயணிகள் நாளை வருகை ;சிறப்பு ஏற்பாடுகள் தீவிரம் 

Onetamil News
 

வ.உ.சி. துறைமுகத்திற்கு இலங்கை கொழும்பில் இருந்து INS JALASHWA  கப்பல் மூலம் பல்வேறு  மாநிலங்களை சேர்ந்த பயணிகள் நாளை வருகை ;சிறப்பு ஏற்பாடுகள் தீவிரம் 


  தூத்துக்குடி 2020 ஜூன்  1 ; தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்கு இலங்கை கொழும்பில் இருந்து INS JALASHWA  கப்பல் மூலம் பல்வேறு  மாநிலங்களை சேர்ந்த பயணிகள் வருகை தருவதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை  தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழகத்தின் தலைவர் டி.கே.ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்கு இலங்கை கொழும்பில் இருந்து INS JALASHWA  கப்பல் மூலம் 02.06.2020 அன்று பல்வேறு  மாநிலங்களை சேர்ந்த பயணிகள் வருகை தர உள்ளார்கள். இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள், பாதுகாப்பு பணிகள் உள்ளிட்ட பணிகளை தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழகத்தின் தலைவர் டி.கே.ராமச்சந்திரன்,மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, ஆகியோர் இன்று (01.06.2020)  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
நாளை 02.06.2020 அன்று இலங்கை கொழும்பில் இருந்து கப்பல் மூலம் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்கு பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுமார் 700 பயணிகள் வருகை தர உள்ளார்கள். அவர்கள் இறங்கும் இடத்தில் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யும் இடம், பரிசோதனை முடிந்த பின் பேருந்தில் பாதுகாப்பாக அழைத்து சென்று காத்திருப்போர் அறையில் அவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள், குடிவரவு நுழைவு பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள், உடைமைகளை ஸ்கேனிங் செய்யும் இடம் மற்றும் பயணிகள் பேருந்துகளில் செல்லும் இடங்கள் மற்றும் காத்திருப்போர் அறையில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பயணிகள் கை கழுவும் இடம், கழிப்பறை, பயணிகளுக்கு குடிநீர் பாட்டில்கள் வைக்கப்படும் இடம் ஆகியவற்றை தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழகத்தின் தலைவர் டி.கே.ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

மேலும், பயணிகளுக்கு காலை உணவு பேருந்துகளில் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். வருகை தரும் பயணிகளின் பட்டியல் அலுவலர்கள் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து அதிக தூரம் கொண்டுள்ள மாவட்டங்களுக்கு முதலில் பயணிகளை அனுப்பி வைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த ஒரு நபரும் விடுபடாத வகையில் அனைத்து நபர்களுக்கும் பரிசோதனை செய்ய வேண்டும். தேவையான அளவு குப்பை தொட்டிகளை ஆங்காங்கே வைக்க வேண்டும். காவல் துறையினர் மூலம் தேவையான பாதுகாப்பு வசதி ஏற்படுத்திட வேண்டும். அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழகத்தின் தலைவர் டி.கே.ராமச்சந்திரன்,  மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, ஆகியோர் அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்கள்.
ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன், கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணுசந்திரன், சார் ஆட்சியர் சிம்ரோன் ஜீத் சிங் காலோன், தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக துணைத்தலைவர் பிமல் குமார் ஜா, உதவி ஆட்சியர் (பயிற்சி) எம்.பிரித்திவிராஜ்,  துறைமுக பொறுப்புக்கழக முதன்மை பொறியாளர் ரவிகுமார், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.தனப்ரியா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் திரு.சங்கரநாராயணன், தூத்துக்குடி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ், துறைமுக பாதுகாப்பு டெப்டி கண்சர்வேட்டர் பிரவீண் குமார் சிங், டிராபிக் மேனேஜர் பிரபாகர், டெப்டி கமாண்டண்ட் மிஸ்ரா(சி.ஐ.எஸ்.எப்), தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக மக்கள் தொடர்பு அலுவலர் சசிகுமார், மரு.பூர்ணிமா மற்றும் வ.உ.சி. துறைமுக பொறுப்பு கழகத்தின் அலுவலர்கள்; உடன் இருந்தனர்.  
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo