தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம், உதவி ஆய்வாளர் சிவக்குமார் உட்பட 39 போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார் எஸ்.பி.பாலாஜி சரவணன்
தூத்துக்குடி 2022 செப் 23; தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய 5 ஆய்வாளர்கள் உட்பட 34 காவல்துறையினர் மற்றும் தன்னார்வலர் ஒருவர் ஆகியோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன்,வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
சென்னை மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த பாலியல் துன்புறுத்தல் வழக்கில் சம்மந்தப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த எதிரியை மேற்படி காவல்துறையினர் 20 நாட்களாக தேடிவந்த நிலையில் துரிதமாக செயல்பட்டு எதிரியை பிடித்து மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தும்,தூத்துக்குடி இரயில்வே காவல் நிலைய குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட எதிரியை துரிதமாக செயல்பட்டு பிடித்து தூத்துக்குடி இரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்த தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம், உதவி ஆய்வாளர் சிவக்குமார், சிறப்பு உதவி ஆய்வாளர் கதிரேசன், முதல் நிலைய காவலர்கள் சமியுல்லா மற்றும் சரவணகுமார் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
காடல்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரியை சம்பவம் நடந்த சில மணி நேரத்தில் கைது செய்த விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் இளவரசு, காடல்குடி காவல் நிலைய தலைமை காவலர்கள் மூக்கையா, சங்கர், விளாத்திகுளம் காவல் நிலைய தலைமை காவலர் பெருமாள், சங்கரலிங்கபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் பால்ராஜ் மற்றும் விளாத்திகுளம் காவல் நிலைய காவலர் மாரீஸ்வரன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த பாலியல் வன்புணர்ச்சி வழக்கில் சம்மந்தப்பட் எதிரிக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனையும், ரூபாய் 10,000/- அபராதமும் பெற்று தந்த தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. வனிதா, முதல் நிலை காவலர்கள் முருகஜோதி மற்றும் ரபீலா குமாரி ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த செயின் பறிப்பு வழக்கில் சம்மந்தப்பட்ட 2 எதிரியை கைது செய்து அவர்களிடமிருந்த 7 பவுன் தங்க செயினை மீட்ட விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலெட்சுமி, முதல் நிலை காவலர்கள் மாரியப்பன் மற்றும் திரு. கொடிவேல் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,தெர்மல்நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த டிரைலர் லாரி திருட்டு வழக்கில் காணாமல் போன லாரியை கண்டுபிடித்த தெர்மல்நகர் காவல் நிலைய ஆய்வாளர் தங்கராஜ், முதல் நிலை காவலர்கள் திரு. செல்வின்ராஜா மற்றும் திரு. பாலமுருகன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
சிப்காட் காவல் நிலையத்தில் பதிவான பெரியாரை அவதூறாக சித்தரித்து வலைதளங்களில் பதிவிட்ட வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரியை கண்டுபிடித்து பெங்களூர் சென்று கைது செய்த சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சங்கர் மற்றும் காவலர் சுமித்ரன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை, கொலை முயற்சி மற்றும் கொள்ளை உட்பட 21 வழக்குகளில் சம்மந்தப்பட்ட நபர் , 6 மாத பிணையில் வந்தவர் மீண்டும் குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்டதால் மேற்படி நபரை கைது செய்து பிணையை மீறிய குற்றத்திற்காக தூத்துக்குடி உட்கோட்ட நடுவர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் நீதிமன்றம் முன்பு 09.09.2022 அன்று ஆஜர்படுத்தி 30.12.2022 வரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்திய தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவராஜா, தலைமை காவலர் லூர்து வேதநாயகம் மற்றும் காவலர் சரவணகுமார் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
கடந்த 27.08.2022 அன்று ஊரக உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் அவர்களிடமிருந்த கிடைத்த தகவிலின்படி வாகன சோதனை செய்து புதூர் பாண்டியாபுரம் சுங்கசாவடி பகுதியில் உள்ள சி.சி.டி.வி மூலம் வாகனத்தை அடையாளம் கண்டு எதிரியை கைது செய்த தருவைக்குளம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. குமரேசன், புதூர் காவல் நிலைய முதல் நிலை காவலர் ஞானராஜ் மற்றும் புதியம்புத்தூர் காவல நிலைய காவலர் பீமாராவ் ராம்சிங் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட 2 எதிரிகளை சம்பவம் நடந்த சில மணி நேரத்திலேய கைது செய்தும்,சாத்தான்குளம் காவல் நிலைய திருட்டு வழக்கில் எதிரியை கண்டுபிடிக்க முடியாமல் நிலுவையில் இருந்தவந்த நிலையில் எதிரியை கைது செய்து அவரிடமிருந்த சுமார் ரூபாய் 3,58,000/- மதிப்புள்ள காப்பர் கம்பிகளை கைப்பற்றிய தட்டார்மடம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் டேவிட் கிறிஸ்துராஜ், நாசரேத் காவல் நிலைய முதல் நிலை காவலர் சுதன் மற்றும் சாத்தான்குளம் காவல் நிலைய காவலர் அருண்குமார் ஆகியேரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 01.08.2022 முதல் 20.08.2022 காலகட்டத்தில் 92 வழக்குகளை நீதிமன்ற கோப்புக்கு எடுத்தும் அதில் 49 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்த ஓட்டப்பிடாரம் காவல் நிலைய தலைமை காவலர் திரு. மாரியப்பன் என்பவரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை மிரட்டல் மற்றும் இரு சக்கர வாகன திருட்டு வழக்களில் சம்மந்தப்பட்ட எதிரியை கைது செய்த தென்பாகம் காவல் நிலைய காவலர்கள் மரிய ஜெகதீஸ் மற்றும் ஜான்சன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
அதேபோன்று தூத்துக்குடி மாவட்ட பகுதிகளில் எதிர்பாராதவிதமாக நீர்நிலைகளில் முழ்கி உள்ளே சிக்கிக்கொண்டு இறந்தவர்களின் உடல்களை மீட்க காவல்துறைக்கு உதவி செய்து வருகின்ற தூத்துக்குடி 3வது மைல் பகுதியை சேர்ந்த தன்னார்வலரான பங்குராஜ் மகன் செல்வம் என்பவரின் தன்னலமற்ற பணியை பாராட்டியும்,5 காவல் ஆய்வாளர்கள் உட்பட 34 காவல்துறையினர் மற்றும் தன்னார்வலர் ஒருவர் ஆகியோரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன், வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்வின்போது தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் சந்தீஷ் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.