Onetamil News Logo

கம்ப்யூட்டர் ஹார்ட்வர் அண்ட் நெட்வொர்க்கிங் பயிற்சி துவக்க விழா;தூத்துக்குடி பாரத ஸ்டேட்  வங்கி ஊரக சுயவேலை பயற்சி மையம்

Onetamil News
 

கம்ப்யூட்டர் ஹார்ட்வர் அண்ட் நெட்வொர்க்கிங் பயிற்சி துவக்க விழா;தூத்துக்குடி பாரத ஸ்டேட்  வங்கி ஊரக சுயவேலை பயற்சி மையம்


தூத்துக்குடி 2019 ஜூலை 10 ;தூத்துக்குடி பாரத ஸ்டேட்  வங்கி ஊரக சுயவேலை பயற்சி மையம் சார்பில் கம்ப்யூட்டர் ஹார்ட்வர் அண்ட் நெட்வொர்க்கிங் பயிற்சி துவக்க விழா நடந்தது. 
 பாரத ஸ்டேட்  வங்கி ஊரக சுயவேலை பயற்சி மையம் (SBI RSETI) முத்தையாபுரம் தூத்துக்குடியில் இயங்கி வருகிறது. இவ்நிறுவனம் ஆனது கிராமபுற வேலை வாய்ப்பற்ற இளைஞர்களை  கண்டறிந்து சுயதொழில் பயிற்சிகளை மூன்று வேளை  இலவச உணவு  மற்றும் தேநீர் தங்குமிட  வசதியுடன்  செயல்பட்டு  வருகிறது இதில் இன்று  10ம் தேதி  கம்ப்யூட்டர் ஹார்ட்வர் அண்ட் நெட்வொர்க்கிங் பயிற்சி துவக்க விழா  நடைபெற்றது. பயிற்சி துவக்க விழாவினை பாரத ஸ்டேட் வங்கி மாவட்ட முன்னோடி  வங்கி  மேலாளர் யோகானந்த் அவர்கள் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.SBI-RSETI இயக்குனர் துரைசாமி முன்னிலை வகித்தார்கள். இதில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 25 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
பயிற்சியானது 45 நாள்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது .இதில் SBI -RSETI ஒருங்கிணைப்பாளர் .அசோக்குமார், A2K நிறுவன கணினி ஆசிரியை அனிதா குமாரி,மற்றும்  அலுவலக உதவியாளர் ஜான்சிராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo