Onetamil News Logo

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில் திருவிழா ;கோவிலுக்கு வருகின்ற 09ம் தேதி முதல் 12ம் தேதி  வரை விருதுநகர் மாவட்டத்தில் அனுமதி ;தூத்துக்குடி எஸ்.பி அறிவிப்பு   

Onetamil News
 

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில் திருவிழா ;வருகின்ற 09ம் தேதி முதல் 12ம் தேதி  வரை விருதுநகர் மாவட்டத்தில் அனுமதி ;தூத்துக்குடி எஸ்.பி அறிவிப்பு     


தூத்துக்குடி 2018 ஆகஸ்ட் 9;சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில் திருவிழா ;கோவிலுக்கு வருகின்ற 09ம் தேதி முதல் 12ம் தேதி  வரை விருதுநகர் மாவட்டத்தில் அனுமதி ;தூத்துக்குடி எஸ்.பி முரளி ரம்பா அறிவிதுள்ளார்.                               
இதுகுறித்து  தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா,வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது...
 வருகின்ற 11.08.2018 அன்று ஆடி அமாவாசை திருவிழா அனைத்து சிவன் கோவில்களிலும் கொண்டாடப்படும். இதே போன்று விருதுநகர்  மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையில் தானிப்பறை என்ற இடத்தில் உள்ள அருள்மிகு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில் திருவிழா வருகின்ற 09.08.18 முதல் 12.08.2018 வரை 4 நடைபெற உள்ளது. இதில் சுமார்  3 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
 கடந்த 1977 மற்றும் 2015ம் ஆண்டுகளில் மேற்படி கோவில் திருவிழாவின் போது மேற்கு தொடர்ச்சி மலையில் மழையின் காரணமாக திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் மலையில் ஆற்றின் ஓரமாக தங்கி ஓய்வெடுத்துக் கொண்டிருந்த 21 ஆண்கள் மற்றும் 28 பெண்கள் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர் 
 எனவே பக்தர்களின் பாதுகாப்பு கருதி மேற்படி கோவிலுக்கு வருகின்ற 09.08.18 முதல் 12.08.2018 வரை சென்று வர காலை 4 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே விருதுநகர் மாவட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதை தூத்துக்குடி மாவட்ட பொதுமக்களுக்கு தெரியப்படுத்துவதுடன், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த  பொதுமக்கள்/பக்தர்கள் மேற்படி அறிவுரையை கருத்தில் கொண்டு சாலை விதிகளை கடைபிடித்து, தங்களது பாதுகாப்பான பயண ஏற்பாடுகளை செய்து கொள்ள கேட்டுக்கொண்டுள்ளார்.. 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo