Onetamil News Logo

திருநங்கையை ஏமாற்றிய வாலிபர் ;தூத்துக்குடியில் பரபரப்பு  

Onetamil News
 

திருநங்கையை ஏமாற்றிய வாலிபர் ;தூத்துக்குடியில் பரபரப்பு  


தூத்துக்குடி 2018 நவம்பர் 8 ; தூத்துக்குடி சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த பாலகுருசாமி(24), இவரும் சுப்பையா முதலியார்புரம் பகுதியைச் சேர்ந்த திருநங்கை  வெண்ணிலா என்ற பிரபு,(27), என்பவரும் கடந்த  இரண்டு வருடங்ளாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்.                                                                                                                                                                          பாலாவுக்கும்,வெண்ணிலாவுக்கும் பழக்கம் தொடர்ந்துள்ளது. இந்த நிலையில் பாலகுருசாமி உறவினர்கள், வெண்ணிலா பாலாவுடனான தொடர்ந்துள்ள உறவை நிறுத்திக் கொள்ளும்படி, கூறி வந்துள்ளனர். நேற்று முன் தினம் வெண்ணிலாவின் வீட்டிற்கு சென்று பிரச்னை செய்துள்ளனர்.  அப்போது அவரைத் தாக்கி இருப்பதாக கூறுகின்றனர். இதனால் வெண்ணிலா  அவருடன் சில திருநங்கைகளும் தென்பாகம் போலீஸ் நிலையத்தில் வந்து  புகார் செய்தனர்.                                                          
                                                                                                                                                            இது குறித்து திருநங்கை வெண்ணிலா  தெரிவிக்கையில், பாலகுருசாமி  தன்னுடன் தாலி கட்டாமல் குடும்பம் நடத்தி வந்தார். அவர் எந்த வேலைக்கும் செல்வதில்லை. நான் தான் கலெக்ஷன் சென்று அவரைக்கு தேவையான  பணம் கொடுத்து வந்தேன்.  இந்நிலையில், தன்னுடைய வண்டிக்கு டியூ  பணம்  கட்ட, 10 ஆயிரம் ரூபாய் கேட்டான். நான்  3 ஆயிரம் ரூபாய்  கொடுத்தேன். அதற்கு அவன் அவனுடைய உறவினர்களை அழைத்து வந்து தகராறு செய்தான். என்னை திருமணம் செய்வதாக சொன்னவன். இப்போது மறுக்கிறான் அதனால் எனக்கு நியாயம் கேட்டு, காவல் நிலையத்தை நாடியுள்ளேன். என்னை ஏமாற்றிய பாலகுருசாமி மீது புகார் தெரிவித்துள்ளேன் என  தெரிவித்தார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo