Onetamil News Logo

மனித உரிமைகள் கழகம் சார்பில் தூத்துக்குடியில் முப்பெரும் விழா ; டாக்டர் எஸ்.சுரேஷ் கண்ணன் பங்கேற்று பேசினார்.

Onetamil News
 

மனித உரிமைகள் கழகம் சார்பில் தூத்துக்குடியில் முப்பெரும் விழா ; டாக்டர் எஸ்.சுரேஷ் கண்ணன் பங்கேற்று பேசினார்.


தூத்துக்குடி 2019 அக்டோபர் 17 ; தூத்துக்குடியில் மாவட்ட அலுவலகம் திறப்புவிழா,நலத்திட்ட உதவி வழங்கும் விழா,பொதுக்கூட்டம் ஆகிய முப்பெரும் விழா  மாலை 6 மணிக்கு தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே உள்ள சிதம்பரநகர் பஸ் ஸ்டாப் முன்பு நடைபெற்றது.இதில் சிறப்புக்கு விருந்தினராக மனித உரிமைகள்  கழகத் தலைவர் டாக்டர் எஸ்.சுரேஷ் கண்ணன், கலந்துகொண்டு கழக கொடியேற்றினார்..பின்னர் விவிடி சிக்னல் அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி 1000 பேருக்கு இலவச வேட்டி,சேலை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு மனித உரிமைகள் கழகம் மாநில வர்த்தகர் அணி செயலாளர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் A.ஜெபசிங் தலைமை தாங்கினார். டாக்டர்.என்.ஆனந்தி குத்துவிளக்கேற்றினார்.. மத்திய மாவட்ட செயலாளர் வினோத்ராஜ் வரவேற்புரையாற்றினார். உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞர் அசோக்குமார் மற்றும் நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினார்கள். 
இந்நிகழ்ச்சியில்  மனித உரிமைகள் கழகத்தின் தலைவர் டாக்டர் சுரேஷ்கண்ணன் கலந்து கொண்டு ஏழை, எளியவர்களுக்கு வேட்டி, சேலைகள் ,மாணவர்களுக்கு நோட்டு புத்தங்கள் வழங்கினார். 
 மனித உரிமைகள் கழகத்தின் தலைவர் டாக்டர் சுரேஷ்கண்ணன் பேசியதாவது,  தமிழக அளவில் மனித உரிமைகள் கழகத்தை காவல்துறைக்கு எதிரானவர்கள் என்றே  கூறுவார்கள்.காவலர்களுக்கும் மனித உரிமைகள் உண்டு என்று அவர்களுக்காக  நாங்கள் போராடினோம். இதுவரை 30 லட்சம் பேருக்கு தனியார் வேலை வாய்ப்பு வழங்க உள்ளோம். நாங்கள் எம்பி., மற்றும் எம்எல்ஏ.,வாக விரும்பவில்லை. அறிவுசார் அரசியல் இருக்க வேண்டுமென்று விரும்புகிறோம். கடவுள் பிச்சை போட்டால் நாங்கள் எதையும் செய்வோம். இலவசத்திற்காக காத்திருக்கும் இக்கூட்டத்தை இலவசம் வழங்கும் கூட்டமாக மாற்றுவோம். தமிழகத்தில் எங்களால் மாற்றங்கள் ஏற்படும். பொருளாதாரம் மீட்சி பெறும் என அவர் தெரிவித்தார். . 
இந்த விழாவில் மத்திய மாவட்ட இணைச்செயலாளர்கள் இசக்கிராஜ், ஏனோஸ் சுகந்திரராஜ்,மத்திய மாவட்ட துணைச்செயலாளர்கள் முத்து கிருஷ்ணன்,அங்குராஜ்,மத்திய மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அஸ்வின் துரை ,மத்திய மாவட்ட இளைஞர் அணி செயலாளர்கள் ராஜதுரை,இயேசு ராஜா, ஜோஸ் இம்மானுவேல், இசக்கி கணேஷ்,மத்திய மாவட்ட விவசாய அணி செயலாளர் மாரிமுத்து,மத்திய மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர்கள் தங்க மாரியப்பன், காசி லிங்கராஜ்,பால சுப்பிரமணியன்,டேவிட் கருணாகரன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் ஹரிணி,மத்திய மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளர் ராஜ்குமார்,மத்திய மாவட்ட மாணவர் அணி துணைச் செயலாளர்கள் பாலமுருகன்,மாரிகனி , மத்திய மாவட்ட மகளிர் அணி செயலாளர் அனிதா எஸ்தர் ராணி,மத்திய மாவட்ட திருநங்கை இணை அணி செயலாளர் பூமிகா, மத்திய மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் பால் ஜோசப் ,மத்திய மாவட்ட தொழில் நுட்ப பிரிவு அணி செயலாளர் ஆனந்தராஜ்,மத்திய மாவட்ட தொழில் நுட்ப பிரிவு அணி இணை செயலாளர் ஜான் கோயில்ராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.  

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo